ஆந்தலை இயேசுவின் திருதிரு இருதய அற்புதக்கெபியின்96வது ஆண்டு பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Thursday 22 August 2024

ஆந்தலை இயேசுவின் திருதிரு இருதய அற்புதக்கெபியின்96வது ஆண்டு பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தூத்துக்குடி மாவட்டம், ஆகஸ்ட் 22, ஆலந்தலையில் உள்ள இயேசுவின் திரு இருதய அற்புதக்கெபி ஆலயத்தின் 96வது ஆண்டு பெருவிழா இன்று மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. 

முன்னதாக கொடி பவனி நடந்தது. தொடர்ந்து தூத்துக்குடி இரு இருதயங்களின் பேராலய பங்குதந்தை ஜெயக்குமார் தலைமையில் கொடியேற்றப்பட்டது. தூத்துக்குடி சிறுமலர் குருமட அதிபர் உபர்ட்டஸ் மறையுரையாற்றினார். நிகழ்ச்சியில், ஆலய பங்குதந்தை சில்வர்ஸ்டர், உதவி பங்கு தந்தை ஜோதிமணி மற்றும் ஊர் நலக்கமிட்டியினர், இறைமக்கள் திரளாக கலந்துகொண்டனர்.

விழாவையொட்டி தினமும் காலை திருயாத்திரை திருப்பலி, மதியம் நவநாள் திருப்பதி, மாலை மறையுரை, நற்கருணை ஆசீர் நடக்கிறது. 9ம் நாள் திருவிழாவான 29ம் தேதி மாலை 9.15 மணிக்கு திருவிழா மாலை ஆராதனை, நடக்கிறது. தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் ஸ்டீபன் அந்தோணி மறையுரையாற்றுகிறார். தொடர்ந்து இரவு 9மணிக்கு சப்பர பவனி நடக்கிறது.

10ம் நாள் திருவிழாவான 30ம் தேதி, காலை பெருவிழா திருப்பலியை ஆயர் ஸ்டீபன் நிகழ்த்துகிறார். மதியம் வாரவழிபாட்டு திருப்பலியை முன்னாள் ஆயர் இவோன் அம்புரோஸ் நடத்துகின்றனர். மாலை 6மணிக்கு ஜெபமாலை, நற்கருணை ஆசிர், கொடியிறக்கம் நடக்கிறது. தொடர்ந்து சிறப்பு பட்டிமன்றம் நடைபெற உள்ளது.
விழா ஏற்பாடுகளை ஆலய பங்கு தந்தை சில்வர்ஸ்டர், உதவி பங்கு தந்தை ஜோதிமணி மற்றும்திருத்தல நிதிக்குழுவினர் செய்து வருகின்றனர்.

தமிழக குரல் செய்திகளுக்காக
MT.அந்தோணி ராஜா
திருச்செந்தூர் தாலுகா செய்தியாளர்.

No comments:

Post a Comment

Post Top Ad