ஏரல் - நட்டார் அம்மன் கோவிலில் தம்பதிக்கு சஷ்டியப்த பூர்த்தி விழா. - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Sunday, 25 August 2024

ஏரல் - நட்டார் அம்மன் கோவிலில் தம்பதிக்கு சஷ்டியப்த பூர்த்தி விழா.

ஏரல், ஆகஸ்ட்.25, ஏரல் ஶ்ரீ தேவி நட்டார் கொண்ட அம்மன் கோயிலில், கோயம்புத்தூரைச் சேர்ந்த அண்ணாமலை என்ற ரவி மற்றும் ஶ்ரீ தேவி தம்பதியரின் சஷ்டியப்த பூர்த்தி விழா (60 ஆம் திருமண விழா) உற்றார் உறவினர் நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

முன்னதாக கோயிலுக்கு வந்த தம்பதியினரை பூரண கும்பம் கொடுத்து வரவேற்றனர். பின்னர் தம்பதியினர் ஒருவருக்கொருவர் மலர் மாலையினை அணிவித்து கொண்டனர். பின்னர் மங்கல நாண் கயிற்றை மணமகன் அண்ணாமலை மணமகள் ஶ்ரீ தேவிக்கு அணிவித்தார்.

பெரியோர்கள் அனைவரும் மலர் தூவி தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து கொண்டனர். மேற்படி தம்பதியினர் தூத்துக்குடி மாவட்டத்தை பூர்வீகமாக கொண்டவர்கள் என்பதால் இந்த கோயிலை குல தெய்வமாக வழிபடும் வழக்கம்.

தென் மண்டல ஒருங்கிணைப்பாளர் Vn சரவணன் தமிழக குரல் செய்திகள்.


No comments:

Post a Comment

Post Top Ad