தூத்துக்குடியில் வங்கிக்குள் நுழைந்து பொதுமக்களை அச்சுறுத்திய 5அடி நீள பாம்பை தீயணைப்பு வீரர்கள் பிடித்துச் சென்றனர். - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Thursday, 29 August 2024

தூத்துக்குடியில் வங்கிக்குள் நுழைந்து பொதுமக்களை அச்சுறுத்திய 5அடி நீள பாம்பை தீயணைப்பு வீரர்கள் பிடித்துச் சென்றனர்.


தூத்துக்குடியில் வங்கிக்குள் நுழைந்து பொதுமக்களை அச்சுறுத்திய 5அடி நீள பாம்பை தீயணைப்பு வீரர்கள் பிடித்துச் சென்றனர். 

தூத்துக்குடி பீச் ரோட்டில் உள்ள இந்தியன் வங்கியில் இன்று காலை 9 மணி அளவில் திடீரென 5 அடி நீளமுள்ள கொம்பெரி மூக்கன் பாம்பு ஒன்று உள்ளே நுழைந்தது. இதனால் அங்கிருந்த பொதுமக்கள், வங்கி ஊழியர்கள் அதிர்ச்சியடைந்தனர். இது தொடர்பாக தீயணைப்பு துறைக்கு வங்கி ஊழியர்கள் தகவல் தெரிவித்தனர். 

இதையடுத்து தூத்துக்குடி தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலைய உதவி மாவட்ட அலுவலர் நாட்டார் அனந்தி தலைமையில் பணியாளர்கள் விரைந்து வந்து பாம்பினை பிடித்து வனப்பகுதியில் விட்டனர். வங்கிக்குள் பாம்பு நுழைந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது 

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் தாலுகா செய்தியாளர்:சி.நாகராஜ்

No comments:

Post a Comment

Post Top Ad