திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோவிலில் ரூ.5.82 கோடி உண்டியல் காணிக்கை வருவாய் - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Saturday 10 August 2024

திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோவிலில் ரூ.5.82 கோடி உண்டியல் காணிக்கை வருவாய்

 


திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோவிலில் ரூ.5.82 கோடி உண்டியல் காணிக்கை வருவாய்


முருகனின் அறுபடை வீடுகளில் 2ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்தகோயிலில் அரசு மற்றும் தனியார் பங்களிப்புடன் ரூ.300 கோடிகளில் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் நடந்து வருகிறது.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மாதந்தோறும் உண்டியல் காணிக்கைகள் எண்ணப்பட்டு வருகின்றன. உண்டியல் வருமானமும் மாதந்தோறும் உயர்ந்து வருகிறது. கோவில் வசந்த மண்டபத்தில் ஜூலை மாதத்திற்கான உண்டியல் காணிக்கை என்னும் பணி அறங்காவலர் குழுத்தலைவர் அருள்முருகன் தலைமையில், இணை ஆணையர் ஞானசேகர் முன்னிலையில் நடந்தது. இதில், தூத்துக்குடி உதவி ஆணையர் செல்வி, கோவில் அலுவலக கண்காணிப்பாளர் ரவீந்திரன், சிவகாசி பதினெண் சித்தர் மடம் குருகுல வேத பாடசாலை உழவாரபணிக் குழுவினர் மற்றும் கோவில் பணியாளர்கள் ஈடுபட்டனர். கடந்த 2 தினங்களாக எண்ணப்பட்டது.
இதில் ரூ. 5 கோடியே 82 லட்சத்து 68 ஆயிரத்து 146  காணிக்கையா கிடைத்தது. மேலும் தங்கம் 3,787 கிராம், வெள்ளி 49,288  கிராம், 1535 வெளிநாட்டு கரன்சிகளையும் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர். இதில் 2000 ரூபாய் நோட்டுகள் 17 இருந்தது குறிப்பிடத்தக்கது. அதே போல் யானை பராமரிப்புக்கான உண்டியல் மூலம் 2,34,189 ரூபாயும், கோசலை பராமரிப்புக்காக 1,21,089 ரூபாயும் வருவாயாக கிடைத்தது.


தமிழக குரல் செய்திகளுக்காக
MT.அந்தோணி ராஜா திருச்செந்தூர் தாலுகா செய்தியாளர்.

No comments:

Post a Comment

Post Top Ad