திருச்செந்தூரில் போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணி - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Saturday 10 August 2024

திருச்செந்தூரில் போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணி


திருச்செந்தூரில் போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணி நகர்மன்ற துணைத்தலைவர் ஏ.பி.ரமேஷ் துவக்கி வைத்தார்


தமிழ்நாடு பனைமரங்கள் பாதுகாப்பு கூட்டமைப்பு (கூட்டு அறக்கட்டளை) சார்பில் திருச்செந்தூர் செந்தில்முருகன் அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் போதை பொருட்கள் தடுப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. தமிழ்நாடு பனை மரங்கள் பாதுகாப்பு கூட்டமைப்பு மாநில தலைவர் எம்.ஏ.தாமோதரன் தலைமை வகித்தார். காவல் உதவி ஆய்வாளர் பகவத்ஜீ, இளையோர் திருக்குறள் பேரவை நிறுவனர் ஆ.ஆதிநாராயணன்,  நியூ பாசக்கரங்கள் முதியோர் இல்ல இயக்குனர் அ.முத்துப்பாண்டியன், துளசி சோஷியல் டிரஸ்ட் இயக்குனர் எஸ். தனலெட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியர் எம். ஞானபிரகாசி  வரவேற்றுப் பேசினார்.சிறப்பு விருந்தினராக திருச்செந்தூர் நகர்மன்ற துணை பெருந்தலைவர் ஏ.பி. ரமேஷ் கலந்து  கொண்டு பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்தார். பள்ளியில் இருந்துதொடங்கிய பேரணி நகர்மன்ற அலுவலகம், காமராஜர் சிலை, பாரத ஸ்டேட் வங்கி, வடக்கு ரதவீதி வழியாக  வழியாக மீண்டும் பள்ளியைவந்தடைந்தது.
இதில் காவல் உதவி ஆய்வாளர். ஹென்சன் பவுல்ராஜ், நகர்மன்ற ஆணையர் கண்மணி, உதவி தலைமை ஆசிரியர்கள் பாலகணேஷ், விமலா, தமிழ் ஆசிரியர் ஜெபஸ்டின், 9வது வார்டு உறுப்பினர் கண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்  பேரணி முடிவில்  உறுதி மொழி எடுத்துக்கொள்ளப்பட்டது. இறுதியாக பள்ளியின் பசுமை  படை ஆசிரியர் ஆர்.எஸ்.ஆஷா லத்திகா நன்றி கூறினார். பேரணிக்கான ஒருங்கிணைப்பு பணியை பதிவு எழுத்தர் சங்கரநயினார்  செய்திருந்தார்


தமிழக குரல் செய்திகளுக்காக
MT.அந்தோணி ராஜா
திருச்செந்தூர் தாலுகா செய்தியாளர்..

No comments:

Post a Comment

Post Top Ad