எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் வருகின்ற 30.08.2024 அன்று முற்பகல் 11.30 மணி அளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Thursday 22 August 2024

எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் வருகின்ற 30.08.2024 அன்று முற்பகல் 11.30 மணி அளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது.

ஆகஸ்ட் 22, தூத்துக்குடி மாவட்டத்தில், எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் 30.08.2024 அன்று முற்பகல் 11.30 மணி அளவில் மாவட்ட வருவாய் அலுவலர் ச.அஜய் சீனிவாசன் தலைமையில் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் வைத்து நடைபெற உள்ளது. 

இக்கூட்டத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து எரிவாயு உருளை விநியோகஸ்தர்களும், மத்திய அரசின் எண்ணெய் நிறுவன பிரதிநிதிகளும் கலந்து கொள்ள உள்ளார்கள். எரிவாயு பயன்படுத்தும் நுகர்வோர் இக்கூட்டத்தில் கலந்து கொள்ள அழைக்கப்படுகிறார்கள். 

எரிவாயு நுகர்வோர் தங்களது குறைகளை மனுவாக தட்டச்சு செய்தோ அல்லது தெளிவாக எழுதியோ அன்றைய தினம் மாவட்ட வருவாய் அலுவலர் அவர்களிடம் நேரில் அளித்திடலாம். இந்நேர்வில் பொதுமக்களும், நுகர்வோர்களும் பெயர் மாற்றம், புதிய எரிவாயு உருளை வழங்குவதில் கால தாமதம், எரிவாயு விநியோகஸ்தர்களின் சேவையில் குறைபாடுகள், டெபாசிட் தொகை திரும்ப பெறல், புதிய இணைப்பு கோரியதன் நிலை, எரிவாயு உருளைகளுக்கான மானியம் (SUBSIDY) உரிய வங்கி கணக்கில் உரிய காலத்தில் வரவு வைக்கப்படாதிருத்தல், 

எரிவாயு உருளையை விநியோகம் செய்யும் நபர்கள் மீது ஏதும் குறைபாடுகள் மற்றும் எரிவாயு பயன்படுத்தும் நுகர்வோரை பாதிக்கும் எந்த குறைகளையும், இக்கூட்டத்தில் எடுத்துரைத்து தீர்வு காணவும் பொதுமக்கள் இக்குறை தீர்க்கும் நாள் கூட்டத்தை பயன்படுத்தி கொள்ளலாம் என மாவட்ட வருவாய் அலுவலர் ச.அஜய் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

தென் மண்டல ஒருங்கிணைப்பாளர் 
Vn சரவணன் தமிழக குரல் செய்திகள்.

No comments:

Post a Comment

Post Top Ad