நாசரேத் _ பிரகாசபுரத்தில் பரிசுத்த பரலோக அன்னை ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம் 14 ம் தேதி தேர்பவனி... - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Wednesday 7 August 2024

நாசரேத் _ பிரகாசபுரத்தில் பரிசுத்த பரலோக அன்னை ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம் 14 ம் தேதி தேர்பவனி...

 


நாசரேத் _ பிரகாசபுரத்தில் பரிசுத்த பரலோக  அன்னை ஆலய  திருவிழா கொடியேற்றத்துடன்   துவக்கம்  14 ம் தேதி  தேர்பவனி...



நாசரேத் _ பிரகாசபுரத்தில்  பரிசுத்த பரலோக அன்னை ஆலய திருவிழா  கொடியேற்றத்துடன்  தொடங்கியது.வருகிற 14 ம்தேதி  தேர் பவனி நடக்கிறது.


நாசரேத் அருகே உள்ள பிரகாசபுரம் பரிசுத்த பரலோக அன்னை ஆலய 145 வது திருவிழா   கடந்த 6 ம் தேதி  கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது.திருவிழா தொடர்ந்து  10 நாட்கள் நடக்கிறது. 
  

6 ம் தேதி ( செவ்வாய்க்கிழமை) 1 ம் திருவிழா  காலை 5.40 மணிக்கு ஜெபமாலை பவனி, திருப்பலி  நடந்தது. மாலை 6.30 மணிக்கு  ஜெபமாலை‌, கொடி பவனியும்,  மாலை 7 மணிக்கு  கொடியேற்றம், மறையுரை, நற்கருணை ஆசீர் நடந்தது .மன்னார்புரம்  பணிகளின் ஒருங்கிணைப்பாளர்  நெல்சன் அடிகளார்  தலைமை வகித்து கொடியேற்றி வைத்து மறையுரை ஆற்றினார் .பிரகாசபுரம் பங்குத்தந்தை சலேட் ஜெரால்ட் வரவேற்றார்.  இதில் பிரகாசபுரம் தூய திரித்துவ ஆலய சேகர தலைவர் நவராஜ், தைலாபுரம்  பங்குத்தந்தை ராபின்சன்  மற்றும்  இறை மக்கள், ஊர் மக்கள் திரளானோர்  பங்கேற்றனர்.
 

இதையடுத்து  ஜாஸ் பேண்ட் , கென்னடி இசைக்குழுவினரின் இசை நிகழ்ச்சி நடந்தது.திருவிழாவை முன்னிட்டு தினமும் காலை 5.40 மணிக்கு ஜெபமாலை பவனி, திருப்பலியும் மாலை 6.30 மணிக்கு  ஜெபமாலை, மறையுரை, நற்கருணை ஆசீரும் நடக்கிறது. 


14 ம் தேதி ( புதன்கிழமை ) 9 ம் திருவிழா  காலை 7.30 மணிக்கு ஜெபமாலை பவனி, திருப்பலி  கடகுளம் பங்குத்தந்தை அன்பு செல்வன்  தலைமையில் நடக்கிறது ‌. அன்று மாலை 7 மணிக்கு  திருவிழா சிறப்பு மாலை ஆராதனை  வடக்கன்குளம்  அருட்பணி. ஜெபநாதன் தலைமையில் நடக்கிறது. பாளையங்கோட்டை  மறை  மாவட்ட அருட்பணி.புதுமை ஜோசப்ராஜ் , மண்ணின் மைந்தர் அருட்பணி‌.அருண் ஆகியோர் மறையுரை ஆற்றுகிறார் கள்.  இரவு 11 மணிக்கு அன்னையின்  அற்புத திருத்தேர் பவனி  நடக்கிறது. இதனை தொடர்ந்து  வாணவேடிக்கை நிகழ்ச்சி நடக்கிறது. 


15 ம் தேதி ( வியாழக்கிழமை ) 10 ம் திருவிழா  அதிகாலை 3 மணிக்கு  தேரடி த்திருப்பலி  மண்ணின் மைந்தர்   அருட்பணி.ஒயிட் ராஜா தலைமையில் நடக்கிறது ‌. காலை 8 மணிக்கு புதிய ஜெபமாலை  தோட்டம் அர்ச்சிப்பு  மற்றும்  திருவிழா  ஆடம்பர கூட்டுத்திருப்பலி  நடக்கிறது. தூத்துக்குடி மறை மாவட்ட ஆயர்.ஸ்டீபன்  ஆண்டகை  தலைமை வகித்து  நற்செய்தி வழங்குகிறார். காலை 11 மணிக்கு அன்னையின் அற்புத திருத்தேர் பவனி நடக்கிறது ‌. அன்று மாலை 6. 30 மணிக்கு நற்கருணை பவனி சாத்தான்குளம் வட்டார முதன்மைகுரு. செல்வ ஜார்ஜ்  தலைமையில் நடக்கிறது. செய்துங்கநல்லூர் பங்குத்தந்தை ஜாக்சன் அருள்  முன்னிலை வகிக்கிறார் .


தென்மண்டல  ஒருங்கிணைப்பாளர் வெனி  இளங்குமரன் மறையுரை ஆற்றுகிறார். இதையடுத்து  இரவு 10 மணிக்கு  விஜய் டிவி புகழ் அன்னபாரதி  குழுவினரின் இன்னிசை பட்டிமன்றம் நிகழ்ச்சி நடக்கிறது. ஏற்பாடுகளை பிரகாசபுரம் பரிசுத்த பரலோக அன்னை ஆலய  பங்குத்தந்தை சலேட் ஜெரால்ட் மற்றும் விழாக்குழுவினர், அருட்சகோதரிகள்,
இறை மக்கள்  செய்துள்ளனர்.


தமிழக குரல் செய்திகளுக்காக
MT.அந்தோணி ராஜா
திருச்செந்தூர் தாலுகா செய்தியாளர்.

No comments:

Post a Comment

Post Top Ad