தமிழ்நாடு வக்பு வாரியத் தலைவர் அல்ஹாஜ் அப்துர் ரஹ்மான் ExMP உடன் வி.சி.க நிர்வாகி வழக்கறிஞர் M.N. அஹமது சாஹிபு சந்திப்பு...
இஸ்லாமிய ஆண்டின் முதல் மாதமாக முஹர்ரம் மாதம் கடைபிடிக்கப் பட்டு வருகிறது. இஸ்லாமிய ஹிஜ்ரி காலண்டர் படி முஹர்ரம், ரஜப், துல் கஃதா மற்றும் துல் ஹஜ் ஆகிய நான்கு மாதங்களும் புனித மாதங்களாகும்.
இஸ்லாமியப் புத்தாண்டின் முதல் மாதமான முஹர்ரம் மாதத்தின் 10-வது நாள் ஆஷூரா தினமாகக் கடைபிடிக்கப் படுகிறது.
சென்னை வக்ஃபு வாரிய தலைமை அலுவலகத்தில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாநில நிர்வாகியும், தமிழ்நாடு வக்ஃபு வாரியத்தின் தலைவருமான அல்ஹாஜ் அப்துர் ரஹ்மானை அவர்களை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிர்வாகியான வழக்கறிஞர் அஹமது சாஹிபு மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார். அப்துர்ரஹ்மானுக்கு, அஹமது சாஹிபு பொன்னாடை அணிவித்து வாழ்த்துக்கள் தெரிவித்தார். மேலும் தலைவரின் சீரிய முயற்சியில், தமிழ்நாடு தழுவிய அளவில் வக்ஃபு சொத்துக்கள் பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் புனரமைப்புப் பணிகள் துரிதமாக நடைபெற்று வருவது பற்றி கேட்டறிந்து வாழ்த்துக்களை தெரிவித்தார்.
வழக்கறிஞர் அஹமது சாஹிபுவின் சமூகநீதிக்கான செயல் பாடுகளை தலைவர் அப்துர் ரஹ்மான் அவர்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தார். இச்சந்திப்பின்போது காயல் சமூகநீதிப் பேரவையின் நிர்வாகி செய்யது அப்பாஸ், வக்ஃபு வாரிய அதிகாரிகள் மற்றும் ஜமாத்தார்கள் உடன் இருந்தனர்.
தமிழக குரல் செய்திகளுக்காக
MT.அந்தோணி ராஜா
திருச்செந்தூர் தாலுகா செய்தியாளர்.
No comments:
Post a Comment