ஏரலில் உள்ள பிரசித்தி பெற்ற.....குரங்கணி முத்துமாலை அம்மன் கோவிலில் ஆனிப் பெருந்திருவிழா....
தூத்துக்குடி மாவட்டம் குரங்கனி முத்துமாலை அம்மன் பிரசித்தி பெற்ற கோவிலாகும். இங்கு நடக்கும் திருவிழாக்களில் ஆனிப் பெருந்திருவிழா சிறப்பு வாய்ந்ததாகும். இந்த ஆண்டு ஆனிப் பெருந்திருவிழா கடந்த 27ம்தேதி கால்நாட்டு விழாவுடன் தொடங்கியது. முக்கிய விழாவான செவ்வாய்க்கிழமை அன்னதானம், மதியம் 1 மணிக்கு சிறப்பு பூஜை, 2 மணிக்கு பக்தி இசை நடந்தது. திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் அதிகாலையில் கோயிலில் மாவிளக்கு எடுத்து, கொளுக்கட்டை அவியல் செய்து அம்மனுக்கு படைத்து வழிபட்டனர். நள்ளிரவு 1 மணிக்கு ஆனிப்பெருந்திருவிழா சிறப்பு பூஜை, இரவு 2 மணிக்கு நாராயணசுவாமி பெரிய சப்பரத்தில் எழுந்தருளி திருவீதி வலம் வரும் நிகழ்ச்சி நடக்கிறது. விழாவையொட்டி முக்கிய ஊர்களில் இருந்து குரங்கனிக்கு அரசு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. இன்று புதன்கிழமை ஏராளமான பக்தர்கள் பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினர். திருவிழாவை முன்னிட்டு பக்தர்களுக்கு குடிநீர், மின்விளக்கு உட்பட அனைத்து ஏற்பாடுகளையும் கோயில் நிர்வாகத்தினர் செய்துள்ளனர்.
தமிழக குரல் செய்திகளுக்காக
MT.அந்தோணி ராஜா
திருச்செந்தூர் தாலுகா செய்தியாளர்.
No comments:
Post a Comment