ஆழ்வார்திருநகரி எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமி திரு நட்சத்திரம்.
ஆழ்வார்திருநகரி, ஜூலை. 18. ஆழ்வார்திருநகரி நவதிருப்பதிகளில் 9 வது திருத்தலம். ஆதிநாதர் ஆழ்வார் திருக்கோயில் மற்றும் அதனைச் சுற்றியுள்ள மாடவீதிகளில் வைணவ ஆசாரியர்களின் சன்னதிகளும் உள்ளன.
மேலும் ஊரின் மேல்புறம் சதுர்வேதி மங்கலம் என்ற பகுதியில் எம்பெருமானார் என்ற இராமானுஜர் கோவில் உள்ளது. அதன் அதன் மேற்பார்வையாளராக எம்பெருமானார் ஜீயர்கள் ஆண்டாண்டு காலமாக இருந்து கைங்கர்யம் செய்து வருகின்றனர்.
தற்போது ஸ்ரீ ரெங்க ராமானுஜம் என்ற எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் கைங்கர்யம் செய்து வருகிறார். அவரது 70 வது திரு நட்சத்திரம் நேற்று நடைபெற்றது. அதனை முன்னிட்டு எம்பெருமானார் சன்னதியில் காலை 7 மணிக்கு விஸ்வரூபம். 8 மணிக்கு திருமஞ்சனம். 9 மணிக்கு திருவாராதனை நடந்தது 10.15 மணிக்கு எம்பெருமானார் ஸ்ரீ ரெங்க ராமானுஜம் ஜீயர் ஸ்வாமிகள் தலைமையில் திருவாய்மொழி பிள்ளை திருமலாச்சாரி ஸ்வாமி மற்றும் அத்யாபகர்கள் முத்தப்பன், ஸ்ரீதரன், அரவிந்தன், பார்த்தசாரதி, திருவேங்கடத்தான், பட்சிராஜன், பெரிய திருவடி, தெய்வச்சிலை, பிச்சுமணி, வரதசடகோபன், வேங்டகிருஷ்ணன், அனந்த வெங்கடேசன், சுதர்ஸன் ஆகியோர் திருவாய்மொழி பாசுரங்கள் சேவித்தனர்.
மேலும் ராமானுஜரின் ஆசாரியன் ஆன ஆளவந்தார் அவதார தினமான ஆடி உத்திராடத்தை முன்னிட்டு திருவிழா இன்று முதல் துவங்கியது. 12.10 மணிக்கு சாத்து முறை நடந்தது. பின்னர் நவதிருப்பதி கோவில்களில் இருந்து வரப்பெற்ற பிரசாதங்கள். அர்ச்சகர் சீனிவாசன் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமி களுக்கு அணிவித்தார். பக்தர்களுக்கு தீர்த்தம் சடாரி, பிரசாதங்கள் வழங்கப்பட்டது. ஆரியாஸ் பாபு, விக்ரம், முன்னாள் அறங்காவலர் குழுத் தலைவர் ராஜப்பா வெங்கடாச்சாரி உட்பட ஏராளமான ஜீயர் ஸ்வாமிகளின் சிஷ்யர்கள் ஆசீர்வாதம் பெற்றனர்.
தூத்துக்குடி மாவட்டம் ஏரல் தாலுகா
தென் மண்டல ஒருங்கிணைப்பாளர்
Vn சரவணன் தமிழக குரல் செய்திகள்.
No comments:
Post a Comment