திருச்செந்தூர் அய்யா வைகுண்டர் அவதார பதியில் ஆடித்திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்
ஜூலை 29ல் தேரோட்டம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கடற்கரையில் அமைந்துள்ள அய்யா வைகுண்டர் அவதாரபதியில் 11 நாட்கள் நடக்கும் ஆடித்திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி அதிகாலை 5 மணிக்கு நடைதிறக்கப்பட்டு உகப் படிப்பு, பணிவிடை நடைபெற்றது. காலை 7 மணிக்கு வள்ளியூர் அய்யா வழி அகில திருக்குடும்ப மக்கள் சபை தலைவர் தர்மர் கொடியேற்றினார். இதில் செயலாளர் பொன்னுதுரை, துணைத் தலைவர் அய்யா பழம், துணை செயலாளர் ராஜேந்திரன், பொருளாளர் கோபால் நாடார் உள்பட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து அய்யா வைகுண்டர் புஷ்ப வாகனத்தில் எழுந்தருளி பதியை சுற்றி பவனி வருதல், அன்னதர்மம் வழங்குதல், மதியம் 12 மணிக்கு உச்சி படிப்பு, பணிவிடை, அன்ன தர்மம் வழங்குதல் நடைபெற்றது. விழா நாட்களில் காலை, மாலையில் உகப்படிப்பு பணிவிடை, மதியம் உச்சி படிப்பு பணிவிடையும், காலை, மதியம், இரவு அன்னதர்மம் இனிமம் வழங்குதல், மாலையில் பல்வேறு வாகன பவனி நடக்கிறது. விழாவின் சிகர நிகழ்ச்சியான 11ம் திருவிழா தேரோட்டம் வரும் 29ம்தேதி மதியம் 12.05 மணிக்கு நடக்கிறது.
தமிழக குரல் செய்திகளுக்காக
MT.அந்தோணி ராஜா
திருச்செந்தூர் தாலுகா செய்தியாளர்.
No comments:
Post a Comment