கள்ளச்சாராயத்தை ஒழிக்க வலியுறுத்தி.....திருச்செந்தூரில் அதிமுகவினர் துண்டு பிரசுரம் வினியோகம்.... நிர்வாகிகள் பூந்தோட்ட மனோகரன், மகேந்திரன் பங்கேற்பு.....
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவுபடி தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளர் எஸ் பி சண்முகநாதன் ஆலோசனைப்படி கள்ளச்சாராயத்தை ஒழிக்க நடவடிக்கை எடுக்க கோரியும், மதுவிலக்கை அமல்படுத்த வலியுறுத்தியும் திருச்செந்தூர் பகுதியில் அதிமுகவினர் நேற்று துண்டு பிரசுரம் விநியோகித்தனர். பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளிடம் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. நிகழ்ச்சிக்கு ஒன்றிய அதிமுக செயலாளர் பூந்தோட்ட மனோகரன், திருச்செந்தூர் நகர செயலாளர் மகேந்திரன் ஆகியோர் தலைமை தாங்கினர். மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளர் சுரேஷ்பாபு, மாவட்ட எம்ஜிஆர் பேரவை இணை செயலாளர்கள் மகாலிங்கம், ராஜா நேரு, மாவட்ட அம்மா பேரவை இணைச்செயலாளர் திருப்பதி,ஒன்றிய அவைத் தலைவர் லிங்க குமார், ஒன்றிய அம்மா பேரவை இணைச் செயலாளர் டாக்டர் சுரேஷ், ஒன்றிய எம்ஜிஆர் இளைஞரணி செயலாளர் நத்தக்குளம் ஜான் வில்லியம்ஸ், மாவட்ட துணைச் செயலாளர் அர்ஜுனன், மாவட்ட வழக்கறிஞர்கள் பிரிவு இணைச்செயலாளர்கள் ஜேசுராஜ், ரவிச்சந்திரன்,ஒன்றிய கவுன்சிலர் செல்வம்,நகர துணைச் செயலாளர் சுந்தர், நகர அம்மா பேரவை செயலாளர் லட்சுமணன், நகர அவைத் தலைவர் காளிமுத்து, காயல்பட்டினம் தொழிற்சங்க செயலாளர் சுயம்பு,ஒன்றிய இலக்கிய அணி செயலாளர் விஜயராகவன், வார்டு செயலாளர் செல்வகுமார், மகளிரணி சுகிர்தா, ராணி, ஸ்ரீலா ரகுராய் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தமிழக குரல் செய்திகளுக்காக
MT.அந்தோணி ராஜா
திருச்செந்தூர் தாலுகா செய்தியாளர்.
No comments:
Post a Comment