ஆழ்வார் திருநகரியில் ஆளவந்தார் திருவதார திருவிழா. - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Sunday 21 July 2024

ஆழ்வார் திருநகரியில் ஆளவந்தார் திருவதார திருவிழா.

 


ஆழ்வார் திருநகரியில் ஆளவந்தார் திருவதார திருவிழா. 



ஆழ்வார்திருநகரி. ஜூலை. 21. தாமிரபரணி ஆற்றின் கரையில் அமைந்துள்ள நவதிருப்பதிகளில் 9 வது  ஆழ்வார்திருநகரி. அங்கு ஊரில் மேல் பக்கம் அமைந்துள்ள சதுர்வேதி மங்கலம் என்ற இடத்தில் எம்பெருமானார்  சன்னதியில் அவரது ஆச்சாரியன் ஆளவந்தார் உள்ளார்.


ஆளவந்தார் ஆடி மாதம் உத்திராடம் நட்சத்திரத்தில் அவதரித்தார். அத்தினத்தையோட்டி ஆழ்வார்திருநகரி ராமானுஜர் சந்ததியில் கடந்த 5 நாட்கள் தினசரி நாலாயிர திவ்யப்பிரபந்தம் சாத்துமுறை நடந்தது. இன்று அவதார தினமான ஆடி உத்திராடம் நட்சத்திரத்தில் காலை 7 மணிக்கு விஸ்வரூபம், 8 மணிக்கு திருமஞ்சனம், 9 மணிக்கு தீபாராதனை, 10 மணிக்கு எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் துவங்க அவருடன் திருவாய்மொழி பிள்ளை சடகோபன், கற்குளம் திருமாளிகை ஸ்வாமி ஸ்ரீ ராம், பார்த்தசாரதி. ராமகிருஷ்ணன்,  கோவிந்தன், முத்தப்பன், அரவிந்தன், பட்சிராஜன், பெரிய திருவடி, தெய்வச்சிலை, சேஷகிரி, பிச்சுமணி, செல்லப்பா, கிருஷ்ணமூர்த்தி, அனந்த பத்மநாபன், அனந்த வெங்கடேசன், வேங்டகிருஷ்ணன், நாலாயிர திவ்யப்பிரபந்தம் சாத்துமுறை. ஆழ்வார் பிரசாதம் ஆளவந்தாருக்கு அர்ச்சகர் சீனிவாசன் அணிவித்தார். பின்னர்  தீர்த்தம் சடாரி பிரசாதம் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சிய முன்னாள் அறங்காவலர் குழுத் தலைவர் ராஜப்பா வெங்கடாச்சாரி, ஆரியாஸ் விக்ரம் ஆகியோர் கலந்து கொண்டனர்.


தூத்துக்குடி மாவட்டம் ஏரல் தாலுகா
தென் மண்டல ஒருங்கிணைப்பாளர் Vn சரவணன் தமிழக குரல் செய்திகள்.

No comments:

Post a Comment

Post Top Ad