உடன்குடி கிழக்கு ஒன்றியம் பரமன்குறிச்சியில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் கோட்டாட்சியர் சுகுமார் மனுக்களை பெற்றார்.....
பொதுமக்கள் தினசரி அணுகும் அரசு துறைகளின் சேவைகள் அவர்களுக்கு விரைவாகவும் எளிதாகவும் சென்று சேரும் வகையில் மக்களுடன் முதல்வர் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் அறிமுகப்படுத்தி உள்ளார் .அதன்படி உடன்குடி கிழக்கு ஒன்றியம் பரமன்குறிச்சியில் மக்களுடன் முதல்வர் முகாம் இன்று நடைபெற்றது. முகாமிற்கு திருச்செந்தூர் வருவாய் கோட்டாட்சியர் சுகுமார் தலைமை வகித்து பொது மக்களிடம் விண்ணப்ப மனுக்களை பெற்றுக் கொண்டார். நிகழ்ச்சியில் உடன்குடி கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் இளங்கோ, திமுக மாவட்ட பிரதிநிதி மதன்ராஜ், பரமன்குறிச்சி பஞ்சாயத்து தலைவர் லங்காபதி, துணைத் தலைவர் முத்துலிங்கம், பஞ்சாயத்து அலுவலர் சுந்தர்,சமூக நலன் பாதுகாப்பு திட்ட வட்டாட்சியர் ரதிகலா ஆணையர்,துணை வட்டாட்சியர் கண்ணன், கிராம நிர்வாக அலுவலர் வெங்கடேஸ்வரன், வருவாய் ஆய்வாளர் முனீஸ்வரி, உடன்குடி வட்டார வளர்ச்சி அலுவலர் கருப்பசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர். மேலும் பொதுமக்கள் ஏராளமான கலந்து கொண்டு மனுக்களை வழங்கினர். இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டு தகுதி வாய்ந்த மனுக்களுக்கு உடனடி தீர்வு வழங்கப்பட்டது.
தமிழக குரல் செய்திகளுக்காக
MT.அந்தோணி ராஜா
திருச்செந்தூர் தாலுகா செய்தியாளர்

No comments:
Post a Comment