திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில்....தமிழிசை சவுந்தரராஜன் சாமி தரிசனம்..... கட்சி நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு...
தெலுங்கானா மாநில முன்னாள் கவர்னர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இன்று காலையில் சாமி தரிசனம் செய்தார். கோவிலுக்கு சென்று சுவாமி மூலவர், சண்முகர், வள்ளி தெய்வானை ஆகிய சன்னதியில் வழிபாடு செய்து வெளியே வந்தார். பின்னர் அவர் திருச்செந்தூர் தனியார் விடுதியில் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
இறைவனை தரிசிக்க வந்தேன் அது மிக்க மகிழ்ச்சியாக உள்ளது. பக்தர்களுக்கு அனைத்து அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும். இந்த ராட்சச அலைகள் ஏன் ஏற்படுகிறது என்று விஞ்ஞானபூர்வமான ஆராய்ந்து அதற்கான தீர்வை அரசு ஏற்படுத்த வேண்டும். மத்திய அரசு மைனாரிட்டி அரசு அல்ல ,பலமான அரசு. தேசிய ஜனநாயக கூட்டணியில் தமிழகம் மற்றும் பாண்டிச்சேரியில் இருந்து எம்பிக்கள் போய்இருந்தால் அவர்கள் தமிழகத்திற்கு பல பணிகளை முன்னெடுத்துச் சென்றிருப்பார்கள். இந்திய கூட்டணி 40 எம்பிகளால் என்ன பலன். கூச்சலிடவும் சத்தம் போடுவதுதான் அவர்கள் பணியாக இருக்கும் என தெரிவித்தார். முன்னதாக தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாஜக தலைவர் சித்ராங்கதன் தலைமையில் தமிழிசைக்கு வரவேற்பு அளித்தனர். இதில் திருச்செந்தூர் நகர பாரதிய ஜனதா கட்சி தலைவர் நவ மணிகண்டன், இளைஞர் அணி மாநில செயற்குழு உறுப்பினர் ஜெய ஆனந்த், மாவட்ட துணை தலைவர் சரஸ்வதி, பிறமொழி பிரிவு மாவட்ட தலைவர் ஜெயநாச்சியார் உட்பட பாஜக கட்சி நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்
தமிழக குரல் செய்திகளுக்காக
MT.அந்தோணி ராஜா
திருச்செந்தூர் தாலுகா செய்தியாளர்.

No comments:
Post a Comment