திருச்செந்தூர்: தமிழ்நாடு வணிகர் சங்க அறிக்கை. - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Wednesday, 3 July 2024

திருச்செந்தூர்: தமிழ்நாடு வணிகர் சங்க அறிக்கை.

 


திருச்செந்தூர்: தமிழ்நாடு வணிகர் சங்க அறிக்கை.



திருச்செந்தூர், ஜூலை.04, தமிழ்நாடு  வணிகர் சங்கம் மாநில தலைவர் ரெ. காமராசு நாடார் மத்திய அரசு 3 புதிய குற்றவியல் சட்டத்தை அமல்படுத்தியதை வரவேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிவிக்கையில், மத்திய அரசு 3 புதிய குற்றவியல் சட்டத்தை அமல்படுத்தியதை வரவேற்கிறது. அதே நேரத்தில் சட்டத்தை கையாளும் அதிகாரிகள் கவனமாக செயல்பட வேண்டும், பொதுமக்கள் எந்த விதத்திலும் பாதிப்பு அடைந்து விடக்கூடாது என்பதில் அதிகாரிகள் கவனமாக செயல்பட வேண்டும், இந்த புதிய சட்டங்களால்
பொது மக்களாகிய பெண்கள், சிறுவர்கள், மற்றும் வணிகர்களுக்கு சிறந்த பாதுகாப்பை ஏற்படுத்த இந்த மூன்று புதிய குற்றவியல் சட்டங்கள் வழிவகுக்கிறது இந்தியா காலனித்துவ கால ஆதிக்க சட்ட திட்டங்களில் இருந்து வெளி வருவது வரவேற்கத்தக்கது.



இதனால்  நடைமுறை கால குற்றங்களுக்கு ஏற்றவாறு இந்திய நெறி முறைகளோடு பொருளாதார குற்றம் மற்றும் சமூக நீதி குற்றம் புரிவோருக்கு எதிராக பொதுமக்களுக்கு ஆதரவாக, ஆறுதலாக மூன்று புதிய குற்றவியல் சட்டம் உள்ளதை தமிழ்நாடு வணிகர்சங்கம்  வரவேற்கிறது.



மேலும் கட்டப்பஞ்சாயத்து, ரெளடிகளால் மாமுல் கேட்டு அச்சுறுத்தல், வணிகர்களின் கடைகளை உடைத்து, வணிகர்கள் தாக்கப் படுதல், போன்றவற்றிலிருந்து மூன்று புதிய குற்றவியல் சட்டம் வணிகர்களுக்கு பாதுகாப்பை உறுதி செய்கிறது. கால மாற்றத்திற்கேற்ப இனி குற்றப் புகார்களை காவல் நிலையம் சென்று புகார் கொடுக்கும் முன் மின்னணு ஊடகம் மூலமாக உடனடி புகார் கொடுக்கலாம் என்பது பொதுமக்களுக்கு மிகவும் பாதுகாப்பானது அது போல காவல் எல்லைகளை கண்டறிந்து புகார் கொடுப்பதற்குள் பொதுமக்கள், வணிகர்கள் படும் அவதியில் இருந்து விடுதலை கிடைக்கிறது.



குற்றப் புகார்களை தமிழ்நாட்டில் எந்த காவல் நிலையத்திலும் பதிவு செய்யலாம் என்பது வரவேற்கப்படுகிறது. பெண்களை குறிப்பாக மைனர் பெண்ணை பாலியல் கூட்டு பலாத்காரம் செய்பவர்களுக்காண தண்டனையை கடுமையாக்கி இருப்பது மிகவும் வரவேற்கதக்கது மக்களுக்கான சமூக நீதி முழுமையாக பாதுகாக்கப்படுகிறது,



அதேநேரத்தில் நேற்றைய செய்திதாளில் புதிய சட்டத்தின் கீழ் வணிகரீதியாக ஆக்கிரமிப்பு செய்த வணிகர் மீது முதல் வழக்கு பதிவு என்ற செய்தி சங்கடத்தை ஏற்படுத்துகிறது இது போன்றசம்பவங்களில் வணிகர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என கேட்டு மொத்தத்தில் தமிழ்நாடு வணிகர் சங்கம் 3 சட்ட திருத்தத்தை மனமார வரவேற்கிறது எனவே பொது  மக்களுக்கும், சிறுவர்களுக்கும், வணிகர்களுக்கும், முழு பாதுகாப்பை உறுதி செய்யும் மூன்று புதிய குற்றவியல் சட்டத்தை அமல்படுத்தியதை தமிழ்நாடு  வணிகர் சங்கம் மாநிலத்தலைவர் வணிகர்களின் நம்பிக்கையுமான ரெ.காமராசுநாடார் அறிவித்து நன்றி கூறினார்.



தூத்துக்குடி மாவட்டம் ஏரல் தாலுகா
தென் மண்டல ஒருங்கிணைப்பாளர்
Vn சரவணன் தமிழக குரல் செய்திகள்.

No comments:

Post a Comment

Post Top Ad