மெஞ்ஞானபுரம் அருகே தோட்டத்திற்குள் புகுந்து 20 கோழிகள் திருட்டு. - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Wednesday, 3 July 2024

மெஞ்ஞானபுரம் அருகே தோட்டத்திற்குள் புகுந்து 20 கோழிகள் திருட்டு.


மெஞ்ஞானபுரம் அருகே தோட்டத்திற்குள் புகுந்து 20 கோழிகள் திருட்டு.


மெஞ்ஞானபுரம், ஜூலை.04,  விஜயநாராயணபுரம் பகுதியைச் சேர்ந்த மாறபெருமாள் மகன் ராமலிங்கம் (42) என்பவர் அதே பகுதியில் உள்ள தனது தோட்டத்தில் கோழிகள் வளர்த்து வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த 16.06.2024 அன்று அந்த தோட்டத்திற்குள் புகுந்த மர்மநபர்  20 கோழிகளை திருடிச்சென்றுள்ளார்.
இதுகுறித்து இராமலிங்கம் அளித்த புகாரின் பேரில் மெஞ்ஞானபுரம் காவல் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டதில், மெஞ்ஞானபுரம் குமாரலட்சுமிபுரம் பகுதியைச் சேர்ந்த விஜயகுமார் மகன் ஜெகன் (22) என்பவர் தோட்டத்திற்குள் புகுந்து கோழிகளை திருடியது தெரியவந்தது.

இது தொடர்பாக மெஞ்ஞானபுரம் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் சண்முகராஜ் வழக்கு பதிவு செய்து ஜெகனை கைது செய்து, அவரிடமிருந்த ரூ.4ஆயிரம் பணத்தையும் பறிமுதல் செய்தார்.

இதுகுறித்து மெஞ்ஞானபுரம் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டம்
திருச்செந்தூர் தாலுகா

No comments:

Post a Comment

Post Top Ad