தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பாக மக்கள் குறை தீர்க்கும் முகாம்...
திருச்செந்தூர் தமிழ்நாடு மின்சார வாரியம் அலுவலகத்தில் தூத்துக்குடி மேற்பார்வை பொறியாளர் மக்கள் குறைதீர்க்கும் முகாம் தூத்துக்குடி மாவட்ட மின் பகிர்மான வட்டம் மேற்பார்வை பொறியாளர்(பொறுப்பு) ரெமோனா கலந்துகொண்டு மின்சார வாரியம் சம்பந்தப்பட்ட அனைத்து குறைகளுக்கான மனுக்களை வாங்கினார். பின்னர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் விசாரணை கேட்டறிந்து உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார். இந்த முகாமில் இந்த முகாமில் திருச்செந்தூர் மின் விநியோக செயர் பொறியாளர் விஜய சங்கர பாலன், திருச்செந்தூர் மின் உதவி பொறியாளர் முத்துராமன் மற்றும் திருச்செந்தூர் கோட்டத்துக்கு உட்பட்ட உதவி செயற்பொறியாளர் மற்றும் உதவி மின் பொறியாளர்கள் கலந்து கொண்டனர்.
தமிழக குரல் செய்திகளுக்காக
MT.அந்தோணி ராஜா திருச்செந்தூர் தாலுகா செய்தியாளர்.

No comments:
Post a Comment