பாகிஸ்தானில் வெள்ளி பதக்கம் வென்ற தூத்துக்குடி மாணவிக்கு பாஜக நிர்வாகிகள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்! - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Thursday, 4 July 2024

பாகிஸ்தானில் வெள்ளி பதக்கம் வென்ற தூத்துக்குடி மாணவிக்கு பாஜக நிர்வாகிகள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்!


பாகிஸ்தானில் வெள்ளி பதக்கம் வென்ற தூத்துக்குடி மாணவிக்கு பாஜக நிர்வாகிகள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்!


பாகிஸ்தானில் நடைபெற்ற ஆசிய ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற தூத்துக்குடி மாணவிக்கு பாஜக நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர். 


தூத்துக்குடி அழகர் பள்ளியில் ஏழாம் வகுப்பு பயின்று வரும் முத்தம்மாள் காலனியைச் சேர்ந்த முனியராஜு - முத்து செல்வி தம்பதியரின் மகள் கௌசிகா கடந்த ஜூன் 25 முதல் 29ம் தேதி வரை பாகிஸ்தானில் உள்ள இஸ்லாமாபாத்தில் ஆசிய ஸ்குவாஷ் கூட்டமைப்பு சார்பில் 12 ஆசிய நாடுகளுக்கு இடையே 13 வயதுக்குட்பட்டவர்களுக்கான பிரிவில் நடைபெற்ற ஆசிய ஜுனியர் தனிநபர் சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளிப் பதக்கத்தை வென்றார்.


இதனையடுத்து சாதனை படைத்த மாணவிக்கு தெற்கு மாவட்ட பாஜக சார்பாக மாவட்ட தலைவர் சித்ராங்கதான் நேரில் சென்று வாழ்த்துக்களை தெரிவித்தார். 


மேலும் பாஜக மாநில தலைவர் திரு அண்ணாமலை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்துக்களை தெரிவித்தார். நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாவட்ட, ஒன்றிய பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.


தமிழக குரல் செய்திகளுக்காக- தூத்துக்குடி மாவட்ட நிருபர் சுந்தரராமன்

No comments:

Post a Comment

Post Top Ad