தூத்துக்குடி மாவட்டம், ஜூலை.05, ஆழ்வார்திருநகரி அருகே திருச்செந்தூர் to திருநெல்வேலி மெயின்ரோட்டில் தென்திருப்பேரை பேருந்து நிறுத்தத்தில் அனைத்துப் பேருந்துகளும் நின்று செல்ல வலியுறுத்தி கோரிக்கை.
தென்திருப்பேரையில் மிக முக்கியமான ஆன்மீக ஸ்தலங்களாகிய நவதிருப்பதி மற்றும் நவகயிலாயம் கோவில்களும், தென்திருப்பேரையில் இருந்து 2கி.மீ தொலைவில் பிரசித்திப்பெற்ற குரங்கணி முத்துமாலை அம்மன் திருக்கோவிலில் இன்று 05.07.24 வெள்ளிக்கிழமை முதல் இக்கோயிலில் திருவிழா தொடங்கியுள்ள நிலையில் நூற்றுக் கணக்கான பக்தர்கள் பேருந்துகள் மூலம் தினமும் தென்திருப்பேரை வந்து செல்கின்றனர்.
மேலும் ஆழ்வை ஊராட்சி ஒன்றிய அரசு அலுவலகம், அரசு ஆரம்ப மருத்துவமனை, அரசு மேல்நிலைப் பள்ளி, உதவி கல்வி அலுவலகம், அரசு கால்நடை மருத்துவமனை போன்ற முக்கியமான அரசு அலுவலகங்கள் உள்ளன.
தென்திருப்பேரையை சுற்றியுள்ள 16க்கும் மேற்பட்ட குக்கிராமங்களின் போக்குவரத்திற்கு மையப்பகுதியாக தென்திருப்பேரை பேருந்து நிறுத்தம் உள்ளது.
ஆகவே அனைத்து பேருந்துகளும் (123, PP & BPR என அரசு போக்குவரத்து வகைபடுத்தியுள்ள பேருந்துகள்) உட்பட அனைத்து பேருந்துகளும் தென்திருப்பேரை பேருந்து நிறுத்தத்தில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் சார்பில் பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன். என பா.ஜா க ஆழ்வை ஒன்றிய கிழக்கு மண்டல தலைவர் குமரேசன் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் ஏரல் தாலுகா
தென் மண்டல ஒருங்கிணைப்பாளர்
Vn சரவணன் தமிழக குரல் செய்திகள்.

No comments:
Post a Comment