திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில்.... தேசிய மருத்துவர் தினம் கொண்டாட்டம்.... டாக்டர்கள் செவிலியர்கள் பங்கேற்பு... - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Tuesday, 2 July 2024

திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில்.... தேசிய மருத்துவர் தினம் கொண்டாட்டம்.... டாக்டர்கள் செவிலியர்கள் பங்கேற்பு...


திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் தேசிய மருத்துவர் தினம் கொண்டாட்டம்.... டாக்டர்கள் செவிலியர்கள் பங்கேற்பு.....



இந்தியாவில் மருத்துவர்களின் அர்ப்பணிப்பைப் போற்றும் வகையிலும், அவர்களின் தன்னலமற்ற சேவையைப் பாராட்டத்தக்க வகையிலும் ஆண்டுதோறும் ஜூலை மாதம் 1ம் நாள் தேசிய மருத்துவர் தினம் அனுசரிக்கப்படுகிறது. அதன்படி இன்று நாடு முழுவதும் தேசிய மருத்துவர் தினம் கொண்டாடப்பட்டது. திருச்செந்தூர் அரசு தலைமை மருத்துவமனையில் நடந்த விழாவிற்கு தலைமை மருத்துவ அலுவலர் டாக்டர் பாவனாச குமார் தலைமை வைத்தார். இதில் மருத்துவர்கள் சுமதி ,ஸ்டெல்லா மேரிநித்யா ,அரவிந்த் தசரதன் ,சசிகலா மனோ ஸ்டானி, தினேஷ் ஆண்டனி, சினித்ரா மற்றும் செவிலியர்கள் மருத்துவ பணியாளர்கள் கலந்து கொண்டனர். தலைமை மருத்துவர் அலுவலர் டாக்டர் பாவனாச குமார் கேக் வெட்டி அனைவருக்கும் வழங்கினார். தொடர்ந்து அவர் தேசிய மருத்துவர் தினம் கொண்டாடப்படுவதன் நோக்கம் மற்றும் காரணங்கள் குறித்து விரிவாக பேசினார். அப்போது, இந்தியாவில் டாக்டர் பிதான் சந்திர ராயின் சுகாதாரத் துறையில் ஆற்றிய பங்களிப்பைப் போற்றும் வகையில், 1991 ம் ஆண்டு ஜூலை 1ம் தேதி முதல் தேசிய மருத்துவர்கள் தினம்  கொண்டாடப்படுவதாகவும், டாக்டர் பிரதான் சந்திர ராய் மருத்துவர், கல்வியாளர் ,சுதந்திரப் போராட்ட வீரர் ,சமூக சேவகர் மற்றும் மேற்குவங்க மாநிலத்தின் முதல்வராக பணியாற்றியதாகவும், அவருக்கு நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா விருது 1961ம் ஆண்டு வழங்கி சிறப்பிக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டார்.



தமிழக குரல் செய்திகளுக்காக
MT.அந்தோணி ராஜா
திருச்செந்தூர் தாலுகா செய்தியாளர்.

No comments:

Post a Comment

Post Top Ad