திருச்செந்தூர் முருகன் கோயிலில் நடிகை பிரியா ஆனந்த் சுவாமி தரிசனம் படுகர் இன மக்களின் நடனத்தை கண்டு வியப்பு - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday, 1 July 2024

திருச்செந்தூர் முருகன் கோயிலில் நடிகை பிரியா ஆனந்த் சுவாமி தரிசனம் படுகர் இன மக்களின் நடனத்தை கண்டு வியப்பு

 


திருச்செந்தூர் முருகன் கோயிலில் நடிகை பிரியா ஆனந்த் சுவாமி தரிசனம் படுகர் இன மக்களின் நடனத்தை கண்டு வியப்பு



முருகனின் அறுவடை வீடுகளில் 2வது படைவீடான திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். தமிழகம் மட்டுமின்றி பிறமாநிலங்களில் இருந்தும் வரும் பக்தர்கள், கடலில் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்து செல்கின்றனர். சனி,ஞாயிறு மற்றும் விடுமுறை தினங்களில் பக்தர்களின் வருகை அதிகமாக உள்ளது. நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த படுகர் மக்கள் திருச்செந்தூர் கோயிலுக்கு வந்து சாமிதரிசனம் செய்தனர். மேலும் படுகர் இன மக்களின் பாரம்பரிய நடனத்தை பக்தர்கள் கண்டு ரசித்தனர்.


தமிழ்சினிமாவில் பிரபல முன்னணி நடிகையான பிரியா ஆனந்த். திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தார்.  தரிசனம் முடிந்து வெளியே வந்த நடிகை பிரியா ஆனந்த், ஆரவாரத்துடன் கோவில் முன்பு நடனமாடி கொண்டிருந்த படுகர் இன மக்களின் ஆட்டத்தினை  கண்டு ரசித்தார்.  தொடர்ந்து, கோவில் யானை தெய்வானையிடம் பிரியா ஆனந்த் ஆசிர்வாதம் வாங்கினார்.  கோயிலுக்கு  வந்திருந்த பக்தர்கள் பிரியாஆனந்த்துடன் ஆர்வத்துடன் செல்பி எடுத்துக்கொண்டனர்.


தமிழக குரல் செய்திகளுக்காக
MT.அந்தோணி ராஜா
திருச்செந்தூர் தாலுகா செய்தியாளர்.

No comments:

Post a Comment

Post Top Ad