திருச்செந்தூர் எடிசன் மருத்துவமனையில் தீக்காயங்களுக்கான சிறப்பு ஆலோசனை முகாம் ஜூலை 19-21ம் தேதி இலவச அறுவை சிகிச்சை - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Sunday, 30 June 2024

திருச்செந்தூர் எடிசன் மருத்துவமனையில் தீக்காயங்களுக்கான சிறப்பு ஆலோசனை முகாம் ஜூலை 19-21ம் தேதி இலவச அறுவை சிகிச்சை

 


திருச்செந்தூர் எடிசன் மருத்துவமனையில் தீக்காயங்களுக்கான சிறப்பு ஆலோசனை முகாம் ஜூலை 19-21ம் தேதி இலவச அறுவை சிகிச்சை


உலக ஒட்டுறுப்பு அறுவை சிகிச்சை தினத்தையொட்டி தீக்காயங்களுக்கான இலவச ஆலோசனை மற்றும் சிறப்பு அறுவை சிகிச்சை முகாம் திருச்செந்தூர் எடிசன் மருத்துவமனையில் இன்று சனிக்கிழமை நடந்தது. செல்வசக்தி மெடிக்கல் டிரஸ்ட், பர்ன் ஹீலிங் பவுண்டேசன், சென்னை gleneagles ஹெல்த் சிட்டி மற்றும் திருச்செந்தூர் எடிசன் மருத்துவமனை இணைந்து இந்த முகாமை நடத்தின.
இதில் தீ புண் காயம், தீக்காயங்களினால் ஏற்படும் முகத்தழும்பு, உறுக்குலைவு, தசைகள், தசை நாண்கள், பிற திசுக்களின் சுறுக்கம், விறைப்பு நிலை உள்ளிட்ட நோய்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது.
மருத்துவர்கள் செல்வசீதாராமன், ராகேஷ், கார்த்திகேயன், கண்ணன், அருணா தேவி ஆகியோர் பரிசோதனை செய்து ஆலோசனை வழங்கினர்.  காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை நடந்த இந்த முகாமில் ஏராளமானோர் கலந்துகொண்டு ஆலோசனைகளை பெற்றனர். இந்த முகாமில் அறுவை சிகிச்சைக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு ஜூலை 19ம் தேதி முதல் 21ம்தேதி வரை இலவச அறுவை சிகிச்சை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.



தமிழக குரல் செய்திகளுக்காக
MT.அந்தோணி ராஜா
திருச்செந்தூர் தாலுகா செய்தியாளர்.

No comments:

Post a Comment

Post Top Ad