ஏரல் விஸ்வகர்மா பேரவையின் கல்வி ஊக்குவிப்பு விழா. - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday 22 July 2024

ஏரல் விஸ்வகர்மா பேரவையின் கல்வி ஊக்குவிப்பு விழா.


ஏரல் விஸ்வகர்மா பேரவையின் கல்வி ஊக்குவிப்பு விழா.


ஏரல், ஜூலை.22, விஸ்வகர்மா கலை வளாகத்தில் எட்டாம் ஆண்டு கல்வி ஊக்குவிப்பு விழாவில், ஏரல் அரசு கண் பரிசோதனை பரிசோதகர் ஆசைத்தம்பி தலைமையேற்று விஸ்வகர்மா ஐவர்ண கொடியை ஏற்றினார். நகை மதிப்பீட்டாளர் அருணன், வாய்ப்பாட்டு கலைஞர் கந்தன், மகாராஜன் ஆகியோர் முன்னிலை வைத்தனர்.


உடன்குடி வானமாமலை பெருமாள் விஸ்வகர்மா பகவான் ஆராதனை நடத்தினார். விழாவில் இலக்கிய சான்றோர்களை கௌரவிக்கும் விதமாக திருநெல்வேலி பன்முக எழுத்தாளர் நெல்லை செல்வம், ஆரணி, சமூக பண்பாட்டு எழுத்தாளர் கோவிந்தராஜன், சென்னை இலக்கிய பத்திரிகையாளர் சொர்ண பாரதி ஆகியோருக்கு இலக்கிய சிற்பி எனும் விருதுகளும், தலா 1000 ரூபாய் பொற்கிழியும் வழங்கப்பட்டது. அத்துடன் தென்காசி சமூக நல ஆர்வலர் மகாராஜனுக்கு சேவை ரத்னா விருதும் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் நெல்லை செல்வம் எழுதிய தமிழக அரசு திட்டத்திற்கு வளர்கல்வி திட்டத்திற்கு ஏற்கப்பட்டுள்ள கண்மணி எனும் சிறுவர் முன்னேற்ற நூல் வெளியிடப்பட்டது.


மேலும், 10 மற்றும் 12ம் வகுப்பில் தேறிய 22 மாணவர்களுக்கு ரூபாய் 33,000 கல்வி ஊக்கத்தொகை பகிர்ந்து வழங்கப்பட்டது. அத்துடன் வாழ்த்து மடலும் சிறுவர்களுக்கு நோட்டு புத்தகங்களும் வழங்கப்பட்டன.


இந்நிகழ்வில் விஸ்வகர்மா பேரவை செயலாளர் கார்த்திகேயன், கவிஞர் ஏரல் ராஜன் தொகுப்புரை வழங்கினர். யோகா ஆர்வலர் தென்கரை மகாராஜன் நன்றி கூறினார். விழாவினை பேரவை நண்பர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.


தூத்துக்குடி மாவட்டம் ஏரல் தாலுகா
தென் மண்டல ஒருங்கிணைப்பாளர்
Vn சரவணன் தமிழக குரல் செய்திகள்.

No comments:

Post a Comment

Post Top Ad