காயாமொழி ஊராட்சியில்....ரூ.39.94 லட்சத்தில் புதிய அலுவலக கட்டிடம்.... அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் திறந்து வைத்தார் ....... - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Tuesday 23 July 2024

காயாமொழி ஊராட்சியில்....ரூ.39.94 லட்சத்தில் புதிய அலுவலக கட்டிடம்.... அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் திறந்து வைத்தார் .......

 


காயாமொழி ஊராட்சியில்....ரூ.39.94 லட்சத்தில் புதிய அலுவலக கட்டிடம்.... அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் திறந்து வைத்தார் ....... 


தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் ஒன்றியம் காயாமொழி  ஊராட்சியில் ரூ.39.94 லட்சம் மதிப்பீட்டில்  ஊராட்சி மன்ற  அலுவலக கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா இன்று நடந்தது. மீன்வளம்,  மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை  அமைச்சர் அனிதாராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி புதிய கட்டிடத்தை திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் திருச்செந்தூர் வருவாய் கோட்டாட்சியர்  சுகுமார், திமுக மாநில வர்த்தக அணி இணைச்செயலாளர்  உமரிசங்கர்,  மாவட்ட ஊராட்சி தலைவர்  பிரம்ம  சக்தி, திருச்செந்தூர் ஒன்றிய திமுக செயலாளர்  செங்குளி ஏபி.ரமேஷ்,  உடன்குடி  ஒன்றிய குழு தலைவர்  பாலசிங், தாசில்தார் பாலசுந்தரம், அமைச்சரின் உதவியாளர்கள் கிருபாகரன், கபடி கந்தன், வழக்கறிஞர் ஜோசப், காயாமொழி பஞ்சாயத்து தலைவர்  ராஜேஸ்வரன், துணைத் தலைவர் ராஜா, பஞ்சாயத்து எழுத்தர் இசக்கி அம்மாள், கிளைச் செயலாளர்கள்


ராகவன், முத்துமாணிக்கம்,சேகு மைதின், லட்சுமணன், சரவணப் பெருமாள், அப்துல் காதர், சலீம் கான் கம்சா, ராகவா ஆதித்தன்,
சுந்தரகுமார் ஆதித்தன்,
தங்கேஸ்வர ஆதித்தன்,
அசோக் தனபால், வன செல்வி, பள்ளிப்பத்து ரவி,  அமிர்தலிங்கம், டாக்டர்  பத்மநாபன் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதே போல் மேல திருச்செந்தூர் ஊராட்சி நா. முத்தையாபுரத்தில் ரூ. 17.33லட்சத்தில் கட்டப்பட்டுள்ள ரேஷன் கடை, ரூ. 6.75லட்சத்தில் 1000லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையம் ஆகியவற்றையும் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.


தமிழக குரல் செய்திகளுக்காக
MT.அந்தோணி ராஜா
திருச்செந்தூர் தாலுகா செய்தியாளர்.

No comments:

Post a Comment

Post Top Ad