தமிழ்நாடு அரசின் காலை உணவு திட்டம் அரசு உதவி பெறும் பள்ளிகளில் இன்று முதல் துவக்கம். - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday, 15 July 2024

தமிழ்நாடு அரசின் காலை உணவு திட்டம் அரசு உதவி பெறும் பள்ளிகளில் இன்று முதல் துவக்கம்.

 


தமிழ்நாடு அரசின் காலை உணவு திட்டம் அரசு உதவி பெறும் பள்ளிகளில் இன்று முதல் துவக்கம்.


ஜூலை.15, தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் திருவள்ளூர் மாவட்டம், கடம்பத்தூர் ஊராட்சி ஒன்றியம், கீழச்சேரி, அரசு உதவி பெறும் புனித அன்னாள் தொடக்கப் பள்ளியில் இன்று 15.07.2024 முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் இந்த ஆண்டின் கல்வி வளர்ச்சி நாளில் தமிழ்நாடு முழுவதிலும் உள்ள அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளில் தொடங்கி வைத்ததை தொடர்ந்து மாப்பிள்ளையூரணி ஊராட்சி, ஆரோக்கியபுரம் வி.வி.டி நினைவு தொடக்கப்பள்ளியில் பயிலும் மாணவ/மாணவியர்களுக்கு மாண்புமிகு தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் முன்னிலையில் காலை உணவு வழங்கி துவக்கி வைத்து உணவருந்தினார்.


அவருடன் மாவட்ட ஆட்சித்தலைவர் கோ.லட்சுமிபதி,ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா, தூத்துக்குடி மாநகராட்சி மேயர் பெ.ஜெகன், மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற தலைவர் ரா.சரவண குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.



தூத்துக்குடி மாவட்டம் & தாலுகா
தென் மண்டல ஒருங்கிணைப்பாளர் Vn சரவணன் தமிழக குரல் செய்திகள்.

No comments:

Post a Comment

Post Top Ad