திருச்செந்தூர் முருகன் கோவிலில் தங்கதேர் தற்காலிகமாக நிறுத்தம்!ஜூலை 17 ம்தேதி முதல் அமலுக்கு வருகிறது! - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Sunday, 14 July 2024

திருச்செந்தூர் முருகன் கோவிலில் தங்கதேர் தற்காலிகமாக நிறுத்தம்!ஜூலை 17 ம்தேதி முதல் அமலுக்கு வருகிறது!

 


திருச்செந்தூர் முருகன் கோவிலில் தங்கதேர் தற்காலிகமாக நிறுத்தம்!ஜூலை 17 ம்தேதி முதல் அமலுக்கு வருகிறது!


தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் தினந்தோறும் மாலை 06.00 மணியளவில் தங்கரதம் பிரகாரம் சுற்றி வருவது வழக்கமாக உள்ளது.


இத்திருக்கோயிலில் ரூ.200 கோடி மதிப்பீட்டில் பெருந்திட்ட வளாகப் பணிகள்28.09.2022 அன்று தமிழ்நாடு முதலமைச்சர் தொடங்கி வைத்தார், கோவில் சுற்றி திருப்பணி  நடைபெற்று வருகிறது.


இத்திருக்கோயிலில் வரும் 2024 கந்தசஷ்டி திருவிழாவிற்கு முன்பு திருக்கோயில் வடக்கு மற்றும் கிழக்கு பிரகார தரைதளம் பணிகள் மற்றும் கந்தசஷ்டி திருவிழாவிற்கு பின்பு திருக்கோயில் தெற்கு மற்றும் மேற்கு பிரகாரம் தரைதளம் பணிகள் நடைபெற உள்ளது. மேற்படி பணிகள் நடைபெற இருப்பதால் ஜூலை 17.07.2024 முதல் தங்கரதம் புறப்பாடு தற்காலிமாக நிறுத்தி வைக்கப்படுகிறது. பணிகள் முடிவுற்ற பின் தங்கரதம் புறப்பாடு வழக்கம் போல் நடத்தப்படும் என  திருக்கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.


தமிழக குரல் செய்திகளுக்காக- தூத்துக்குடி மாவட்ட நிருபர்  சுந்தரராமன்

No comments:

Post a Comment

Post Top Ad