திருச்செந்தூர் தாலுகா அலுவலகத்தில் பொது வினியோக திட்ட சிறப்பு முகாம் 100க்கும் மேற்பட்ட மனுக்களுக்கு உடனடி தீர்வு
தூத்துக்குடி மாவட்டத்தில் கலெக்டர் லட்சுமிபதி உத்தரவுப்படி பொது விநியோக திட்டத்தின் சேவைகளை அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் பொருட்டு, ஒவ்வொரு மாதமும் 2வது சனிக்கிழமையன்று தாலுகா அலுவலகங்களில் பொது விநியோக திட்ட மக்கள் குறைதீர் சிறப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, நடப்பு மாதத்திற்கான குறைதீர் முகாம் தாலுகா அலுவலகங்களில் இன்று நடந்தது.
திருச்செந்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் இன்றுகாலை 10 மணிக்கு தொடங்கி மதியம் 1மணிவரை முகாம் நடைபெற்றது. இதில் வட்டாட்சியர் பாலசுந்தரம், வட்ட வழங்கல் அலுவலர் முருகன், மண்டல துணை வட்டாட்சியர் சிவக்குமார், முதுநிலை வருவாய் ஆய்வாளர் தாரிக் உள்ளிட்டோர் கலந்துகொண்டு மனுக்களை பெற்றனர். ரேஷன் கார்டு முகவரி மாற்றம், பெயர் சேர்த்தல், நீக்கம், குடும்ப தலைவர் பெயர், படம் மாற்றம் உள்ளிட்ட கோரிக்கைகள் தொடர்பாக பொதுமக்களிடம் இருந்து 124 மனுக்கள் பெறப்பட்டன. இதில் 124 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது.
தமிழக குரல் செய்திகளுக்காக
MT.அந்தோணி ராஜா
திருச்செந்தூர் தாலுகா செய்தியாளர்.

No comments:
Post a Comment