கீழநாலுமூலைக் கிணறில் உள்ள குன்றுமேலய்யன் சாஸ்தா கோயிலில் மகா கும்பாபிஷேகம். - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Saturday, 13 July 2024

கீழநாலுமூலைக் கிணறில் உள்ள குன்றுமேலய்யன் சாஸ்தா கோயிலில் மகா கும்பாபிஷேகம்.

 


கீழநாலுமூலைக் கிணறில் உள்ள குன்றுமேலய்யன் சாஸ்தா கோயிலில் மகா கும்பாபிஷேகம் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம்



திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுடன் இணைந்த கீழநாலுமூலைக் கிணறில் உள்ள பூரண, புஷ்கலா தேவி சமேத குன்றுமேலய்யன் என்ற மெய்கண்டமூர்த்தி சாஸ்தா கோயிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்  விழாவையொட்டி  நடைபெற்றன. இன்று  காலை 5 மணிக்கு யாக சாலையில் புண்யாக வாசனம், விசேஷ சந்தி, மூல மந்திர ஹோமம், 7.30 மணிக்கு பரிவார மூா்த்திகளுக்கு பூர்ணாஹுதி தீபாராதனை, 8 மணிக்கு கும்பம் எழுந்தருளல், காலை 8.30க்கு ஸ்பர்சாஹுதி தீபாராதனை நடைபெறுகிறது. தொடர்ந்து 9.15 மணிக்கு கடம் புறப்பாடு, 9.30 மணிக்கு விமான அபிஷேகம், 10 மணிக்கு குன்றுமேலய்யன் சாஸ்தா, பரிவார மூர்த்திகளுக்கு மகா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. இதனை தொடர்ந்து பகல் 12.30க்கு மகா அபிஷேக தீபாராதனை நடைபெற்றது. இதில் மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பிரம்மசக்தி, இணை ஆணையர் கார்த்திக், அறங்காவலர் குழு உறுப்பினர்  கணேசன் உட்பட ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு  சுவாமி தரிசனம் செய்தனர். விழாவையொட்டி    பக்தர்களுக்கு மூன்று வேளை அன்னதானம்  வழங்கப்படுகிறது. இரவு 7 மணிக்கு புஷ்பாஞ்சலி நடைபெறுகிறது.


விழா ஏற்பாடுகளை திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் அறங்காவலர் குழுத் தலைவர் அருள்முருகன், இணை ஆணையர் கார்த்திக், அறங்காவலர்கள் அனிதா குமரன், ராம்தாஸ், கணேசன், செந்தில்முருகன் மற்றும் சாஸ்தா சேவா சங்கத்தினர் சிறப்பாக செய்துள்ளனர்.


தமிழக குரல் செய்திகளுக்காக
MT.அந்தோணி ராஜா
திருச்செந்தூர் தாலுகா செய்தியாளர்.

No comments:

Post a Comment

Post Top Ad