சுதந்திர போராட்ட வீரர் மாவீரன் அழகு முத்துக்கோனின் 314வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டது...
ஆங்கிலேயர்களுக்கு எதிராக முதன் முதலில் போரிட்ட கட்டாலங்குளம் சீமையின் மன்னன் மாவீரன் வீரன் அழகுமுத்துக்கோன். பெத்தநாயக்கனூர் கோட்டை போரில் வீழ்த்தப்பட்டநிலையில், மன்னிப்புக் கேட்டு, வரி செலுத்தினால் உயிர் பிழைக்கலாம் என்று ஆங்கிலேயர்கள் நிபந்தனை விதித்த நிலையில், உயிரேபோனாலும் மன்னிப்பும் கேட்க மாட்டேன், வரியும் செலுத்த மாட்டேன் என்று முழங்கி பீரங்கி குண்டுகளுக்கு தமது மார்புகளை காட்டி உயிர்த்தியாகம் செய்த மாவீரர். இவரின் 314வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்பட்டது.
இதையொட்டி திருச்செந்தூர் நகர பாஜக தலைவர் நவமணிகண்டன் ஏற்பாட்டில் வீரன் அழகுமுத்துக்கோனின் படத்திற்கு மாலை அணிவித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாஜக தலைவர் சித்ராங்கதன், நகர பொருளாளர் கார்த்திகை கந்தன், உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவு மாவட்ட தலைவர் செல்வகுமரன், சிறுபான்மையினர் அணி மாவட்ட தலைவர் ஸ்டீபன் லோபோ, நகர பொதுச்செயலாளர் பிரசாந்த், சண்முக ஆனந்த், நகர செயலாளர்கள் கார்த்தீசன, மீனாட்சி, கிளை தலைவர் காளீஸ்வரி, தொழில்நுட்ப பிரிவு நகர தலைவர் சங்கரநயினார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தமிழக குரல் செய்திகளுக்காக MT.அந்தோணி ராஜா திருச்செந்தூர் தாலுகா செய்தியாளர்.

No comments:
Post a Comment