நாசரேத் _ சாலமோன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் காமராஜரின் 122வது பிறந்த நாள் விழா - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday, 15 July 2024

நாசரேத் _ சாலமோன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் காமராஜரின் 122வது பிறந்த நாள் விழா


 நாசரேத் _ சாலமோன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில்  காமராஜரின் 122வது பிறந்த நாள் விழா


நாசரேத் சாலமோன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் காமராஜரின் 122வது பிறந்த நாள் விழா இன்று பள்ளி வளாகத்தில் கொண்டாடப்பட்டது. இந்த விழாவிற்க்கு பள்ளி தாளாளர் ஜமீன் சாலமோன் தலைமை தாங்கினார்.  பள்ளி நிர்வாகி பியூலாசாலமோன் காமராஜரின் வாழ்க்கை வரலாற்றை குழந்தைகளுக்கு விரிவாக எடுத்துரைத்தார். பள்ளி தலைவர் எலிசபெத் வாழ்த்துரை வழங்கினார். பள்ளி முதல்வர் ஜான்சி கனகராஜ் நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கினார். 


பள்ளி குழந்தைகள் காமராஜரை போல வேடமணிந்து வந்திருந்தனர். குழந்தைகளுக்கு பேச்சுப் போட்டி மற்றும் நடனப் போட்டி நடைபெற்றது. காமராஜரின் வாழ்க்கை வரலாற்றைப் பற்றி மாணவர்கள் நாடகமாக நடத்திக் காட்டினர். 


போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. குழந்தைகளுக்கு இனிப்பு வழங்கி விழா இனிதே நிறைவடைந்தது. பள்ளி உதவி முதல்வர் மாரிதங்கம் நன்றி உரை கூறினார். இந்த விழா ஏற்பாட்டினை பள்ளி ஆசிரியர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.


தூத்துக்குடி மாவட்டம் ஏரல தாலுகா  தென் மண்டல ஒருங்கிணைப்பாளர் Vn சரவணன் தமிழக குரல் செய்திகள்.

No comments:

Post a Comment

Post Top Ad