கிறிஸ்டியாநகரம் T.D.T.A மேல்நிலைப்பள்ளியில் முப்பெரும் விழா முன்னாள் மாணவர்கள் பங்கேற்பு
தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி அருகே கிறிஸ்டியாநகரம் T.D.T.A மேல்நிலைப்பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சார்பில் முப்பெரும் விழா திங்கட்கிழமை காலை நடைபெற்றது. விழாவில் சென்னை மதன் ஹோமியோ கிளினிக் டாக்டர் ஜெயக்குமார் முன்னிலை வகித்தார். ஓய்வு பெற்ற காவல் கண்காணிப்பாளர் கெங்கைராஜ், உடன்குடி கூட்டுறவு வங்கி முன்னாள் தலைவர் அஸ்ஸாப் கல்லாசி, சேதுராமன் ஆகியோர் தலைமை வகித்தனர்.
விழா ஒருங்கிணைப்பாளர் முகம்மது பஸ்லூர் ரகுமான், ஓபிஏ தலைவர் அருள் செல்வக்குமார், உப தலைவரும் கல்லூரி உதவி பேராசிரியருமான ஹரிபிரகாஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள், ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.
மேலும் முன்னாள் மாணவர்கள் சார்பில் பள்ளியில் செயல்பட்டு வரும் அரசு வேலைக்கான தேர்வு பயிற்சி மையம் மூலம் நீட் தேர்வுக்கு பயிற்சி பெற்று அதில் மதிப்பெண் பெற்ற மாணவ,மாணவிகளுக்கு பாராட்டு மற்றும் பரிசு வழங்கப்பட்டன. விழாவில் அரசு வேலைக்கான தேர்வு பயிற்சி மைய கட்டிட அறையும் திறக்கப்பட்டது.
இதற்கான ஏற்பாடுகளை ஆசிரியர்கள் ரவிக்குமார், ஹென்றி, தலைமை ஆசிரியர் ஞானராஜ் மற்றும் முன்னாள். மாணவர்கள் செய்திருந்தனர். முடிவில் அனைவருக்கும் மதியம் அறுசுவை விருந்து வழங்கப்பட்டது.
தமிழக குரல் செய்திகளுக்காக
MT.அந்தோணி ராஜா
திருச்செந்தூர் தாலுகா செய்தியாளர்.

No comments:
Post a Comment