திருச்செந்தூர் முருகன் கோவிலில் ரூ. 4.98 கோடி உண்டியலில் வருவாய் கிடைத்துள்ளது!
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் உண்டியல் மூலம் ரூ. 4.98 கோடி வருவாய் கிடைத்துள்ளது.
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தும் உண்டியல் வருவாய் மாதந்தோறும் இரண்டு முறை எண்ணப்படுகிறது.
கோவில் வெளிப்பிரகாரத்தில் உள்ள வசந்த மண்டபத்தில் அறங்காவலர் குழுத்தலைவர் ரா. அருள்முருகன் தலைமையில் திருக்கோயில் இணை ஆணையர் மு.கார்த்திக் முன்னிலையில் புதன்கிழமை உண்டியல் வருவாய் எண்ணப்பட்டது.
இதில் தூத்துக்குடி உதவி ஆணையர் செல்வி, கோயில் கண்காணிப்பாளர் கோமதி, ஆய்வர் செந்தில்நாயகி, அறங்காவலர் குழுத் தலைவரின் நேர்முக உதவியாளர் செந்தமிழ்பாண்டியன், பொதுமக்கள் பிரதிநிதிகள் கருப்பன், மோகன், சிவகாசி பதினெண் சித்தர் மடம் குருகுல வேத பாடசாலை உழவார பணிக்குழுவினர் மற்றும் கோயில் பணியாளர்கள் ஈடுபட்டனர்.
இதில் ரொக்கமாக ரூ.4 கோடியே 98 லட்சத்து 7,405 கிடைத்துள்ளது. தங்கம் 3 கிலோ 400 கிராமும்,வெள்ளி 54 கிலோ 500 கிராமும், பித்தளை 99 கிலோவும், செம்பு 15 கிலோவும், தகரம் 7 கிலோ மற்றும் 851 வெளிநாட்டு பணத்தாள்களையும் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர்.
தமிழக குரல் செய்திகளுக்காக-தூத்துக்குடி மாவட்ட நிருபர் சுந்தரராமன்

No comments:
Post a Comment