திருச்செந்தூர் அடுத்த நயினாபுரத்தில் சக்தி அம்பாள் கோவிலில் 10 வது வருஷாபிஷேக விழா
திருச்செந்தூர் அடுத்த நயினாபுரத்தில் அருள்மிகு சக்தி அம்பாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கும்பாபிஷேகம் முடிந்து 10ஆண்டுகள் ஆன நிலையில் 10வது வருஷாபிஷேக விழா இன்று வியாழக்கிழமை நடந்தது. இதையொட்டி காலை 5.30 முதல் 7 மணி வரை மங்கள வாத்தியம், மகா கணபதி ஹோமம், நவகிரக ஹோமம், மகாலட்சுமி ஹோமம், கோ பூஜை தீபாராதனை நடந்தது.
தொடர்ந்து காலை 8.30 மணி முதல் 10 மணி வரை கலச பூஜை, வேத பாராயணம், மூலமந்திர யாகம், திரவ்யாஹூதி, வஸ்திராஹூதி, மகா பூர்ணாஹூதி, தீபாராதனையும், காலை 10.30 மணி முதல் 11.30 மணி வரை விமான கும்பாபிஷேகம், சக்தி அம்பாள் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு கும்பாபிஷேகம், அலங்கார தீபாராதனை நடந்தது.
விழாவில் ஊர்மக்கள் திரளாக கலந்து கொண்டனர். தொடர்ந்து அனைவருக்கும் மதியம் அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்காக ஏற்பாடுகளை சந்தணசாமி குடும்பத்தினர் செய்திருந்தனர்.
தமிழக குரல் செய்திகளுக்காக
MT.அந்தோணி ராஜா
திருச்செந்தூர் தாலுகா செய்தியாளர்.

No comments:
Post a Comment