நாசரேத் பகுதியில் தொடரும் மின்வெட்டு - மக்கள் அவதி - கோரிக்கை வைக்கும் இந்து மகா சபா.
நாசரேத், ஜூன்.20, ஏரல் தாலுகா, நாசரேத்தில் 19/6/2024 மாலை முதல் 20/6/2024 காலை 11 மணி வரை மின்தடை ஏற்பட்டது.
இதனால் பொதுமக்கள் அவதியுற்றனர், ஒவ்வொரு நிமிடத்திற்கு ஒரு முறை மின்சாரத்தை விட்டு விட்டு துண்டிக்கின்றனர் இதனால் மின்சாரம் கூடுதலாகவும் குறைவாகவும் வருகிறது.
மின்னழுத்தம் குறைபாடு ஏற்பட்டு வீடுகளில் உள்ள மின்சாதனங்கள் பழுதாகும் வாய்ப்புள்ளது. மின் விபத்து ஏற்பட்டு தீ பற்றவும் வாய்ப்புகள் உள்ளது.
ஆகையால் முறையாக மின் பழுதை சரி செய்து சரியான அளவில் மின்சாரத்தை வீடுகளுக்கு வழங்க வேண்டுமென்று தூத்துக்குடி மாவட்ட மின்வாரியத்திடம் கோரிக்கை வைக்கிறோம்.
மேலும் மின்விபத்துகள் ஏற்பட்டு பொதுமக்களின் உயிருக்கும் உடைமைக்கும் ஆபத்து நேர்ந்தால் அதற்கு உண்டான இழப்பீட்டை மின்சார வாரியம் வழங்க வேண்டும்
என இந்து மகாசபா அமைப்பு சார்பில் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம்
ஏரல் தாலுகா

No comments:
Post a Comment