மெஞ்ஞானபுர பஞ்சாயத்து அலுவலகத்தில் மக்கள் தொடர்பு முகாம் ஏராளமான மக்கள் கோரிக்கை மனுக்கள் அளித்தனர்
தூத்துக்குடி மாவட்ட கலெக்டரின் மக்கள் தொடர்பு திட்ட முகாம் உடன்குடி அருகே மெஞ்ஞானபுரம் பஞ்சாயத்து அலுவலகத்தில் இன்று புதன்கிழமை காலை நடந்தது. இதில் தனித்துணை ஆட்சியர் ஹபிபூர் ரஹ்மான், தாசில்தார்கள் பாலசுந்தரம், ரதிகலா ஆகியோர் பங்கேற்று பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றுக்கொண்டார். இதில் ஏராளமான மக்கள் கலந்து கொண்டு, வீட்டுமனை பட்டா, பட்டா மாறுதல், குடிநீர், சாலை, தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள், ரேஷன்கார்டு, பென்ஷன், மகளிர் உரிமைத்தொகை உள்ளிட்டவை தொடர்பாக மனுக்களை அளித்தனர். பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட மனுக்களை சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அனுப்பி தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவத்தனர்.
இந்த முகாமில் மெஞ்ஞானபுரம் பஞ்சாயத்து தலைவர் கிருபா ராஜபிரபு, உடன்குடி வருவாய் ஆய்வாளர் முனீஸ்வரி, விஏஓக்கள் மெஞ்ஞானபுரம் திருமுகம், குதிரைமொழி நடராஜன், செம்மறிக்குளம் சரவணன், லட்சுமிபுரம் அமுதா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தமிழக குரல் செய்திகளுக்காக MT.அந்தோணி ராஜா திருச்செந்தூர் தாலுகா செய்தியாளர்.

No comments:
Post a Comment