திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சுமார் 300 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்ட பணிகள்...
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தற்போது ஹெச்.சி.எல். நிறுவனத்தின் சார்பில் ரூ. 200 கோடியிலும், அறநிலையத்துறை சார்பில் ரூ. 100 கோடியிலும் என மொத்தம் ரூ. 300 கோடி செலவில் பெருந்திட்ட வளாகப்பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. அதேபோல கோயிலில் கும்பாபிஷேக பணிகளும் ஒருங்கிணைந்து நடந்து வருகிறது. இதன் ஒரு பழைய மின் நிலையத்திற்கு பதிலாக புதிய மின் நிலையம் இடும்பன் கோயில் எதிரில் அமைக்கப்பட்டுள்ளது. நவீனமயமாக்கப்பட்ட புதிய மின் நிலையத்தின் பயன்பாட்டிற்காக நேற்று மாலை திறக்கப்பட்டது. இந்த புதிய மின் நிலையத்தின் செயல்பாட்டினை அறங்காவலர் குழுத்தலைவர் அருள்முருகன் துவங்கி வைத்து, இனிப்புகள் வழங்கினார். நிகழ்ச்சியில் கோயில் செயற்பொறியாளர் முருகன், கோயில் மின் நிலைய உதவி செயற்பொறியாளர் கிருஷ்ணதாஸ், ஹெச்.சி.எல். மேலாளர் பிரவீன், அறங்காவலர் குழுத்;தலைவரின் நேர்முக உதவியாளர் செந்தமிழ்பாண்டியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தமிழக குரல் செய்திகளுக்காக
MT.அந்தோணி ராஜா
திருச்செந்தூர் தாலுகா செய்தியாளர்..

No comments:
Post a Comment