தூத்துக்குடி மாவட்டம் : திருச்செந்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்தவர் கைது - 180 கிராம் கஞ்சா பறிமுதல்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் அவர்கள் உத்தரவின்படி திருச்செந்தூர் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் திரு. வசந்தராஜ் அவர்கள் மேற்பார்வையில் திருச்செந்தூர் காவல் நிலைய ஆய்வாளர் திரு. சுந்தரமூர்த்தி மற்றும் சிறப்பு சார்பு ஆய்வாளர் திரு. பாலசுப்பிரமணியன் தலைமையிலான உட்கோட்ட தனிப்படை போலீசார் நேற்று (18.06.2024) ரோந்து பணியில் ஈடுபட்டபோது திருச்செந்தூரில் உள்ள ஒரு பள்ளி அருகே சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று கொண்டிருந்தவரை பிடித்து விசாரணை செய்ததில், அவர் காயல்பட்டினம் காட்டு தைக்கா தெருவை சேர்ந்த பாபு ஜான் மகன் ஜான் பாட்ஷா (25) என்பதும், அவர் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது.
உடனே மேற்படி போலீசார் எதிரி ஜான் பாட்சாவை கைது செய்து அவரிடமிருந்த 180 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து திருச்செந்தூர் காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழக குரல் செய்திகளுக்காக MT.அந்தோணி ராஜா திருச்செந்தூர் தாலுகா செய்தியாளர்.
.jpg)

No comments:
Post a Comment