எட்டயபுரம் பகுதியில் "தமிழ்நாடு அரசின் உங்களை தேடி உங்கள் ஊரில்" நிகழ்ச்சி.
எட்டயாபுரம், ஜூன்.19, தமிழ்நாடு அரசின் அனைத்து நலத்திட்டங்களும், சேவைகளும் தங்கு தடையின்றி விரைந்து மக்களை சென்றடைவதை உறுதி செய்திட வேண்டுமென்ற உன்னத நோக்கத்தின் அடிப்படையில் "உங்களைத் தேடி உங்கள் ஊரில்" என்ற புதிய திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்ததைத் தொடர்ந்து, எட்டயபுரம் வட்டம், கன்னக்கட்டை ஊராட்சியில் வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறையின் மூலம் செயல்படும் தரம் பிரிப்பு கூடாரத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் பார்வையிட்டு,
ஊரக வளர்ச்சித் துறையின் மூலம் ரூ.99.90 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட்டு கருங்கல் கப்பி சாலை பணிகளை ஆய்வு செய்து,
பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள கன்னக்கட்டை கண்மாயினை பார்வையிட்டார்.
கன்னக்கட்டை ஊராட்சியில் இருந்து சோழபுரம் வரை செல்லும் கருங்கல் கப்பி சாலையில் புதிதாக கட்டப்பட்டு வரும் சிறு பாலத்தை பார்வையிட்டு, கல்லாறு ஆற்றில் உள்ள தடுப்பணை அணைக்கட்டினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு மேற்கொண்டார்.
கீழஈரால் கிராமத்தில் வெள்ளத்தால் இடிந்து விழுந்த வீட்டினை தற்போது ஊரக வளர்ச்சித்துறையின் மூலம் ரூ.4.00 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டு வருவதை மாவட்ட ஆட்சித்தலைவர் பார்வையிட்டார். கீழஈரால் ஊராட்சியில் 15வது மத்திய நிதிக்குழு மானியத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ.50 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள வட்டார பொது சுகாதார ஆய்வகம் மற்றும் அலுவலகத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் பார்வையிட்டார்.
கீழஈரால் ஊராட்சி மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திலுள்ள புற நோயாளிகள் பிரிவினை மாவட்ட ஆட்சித்தலைவர் பார்வையிட்டார். எட்டயபுரம் வட்டம் எட்டயபுரம் பாரதியார் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியை மாவட்ட ஆட்சித்தலைவர் பார்வையிட்டு மாணவிகளுடன் கலந்துரையாடினார்.
மேலும் அப்பள்ளியில் குழந்தைகளுக்கு வழங்கப்படும் மதிய சத்துணவினை பார்வையிட்டு அதன் தரம் குறித்த ஆய்வு செய்தார்.
அத்துடன் பள்ளி வளாகத்தில் உள்ள மாதிரிப் பள்ளியில் போதை பொருட்களுக்கு எதிராக உருவாக்கப்பட்டுள்ள மாணவர் காவலர் படையினருடன் கலந்துரையாடினார். இந்த ஆய்வுகளின் போது கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) செல்வி. ஐஸ்வர்யா மற்றும் அரசு அதிகாரிகள் உடனிருந்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் எடடயாபுரம் தாலுகா தென் மண்டல ஒருங்கிணைப்பாளர் Vn சரவணன் - தமிழக குரல் செய்திகள்.

No comments:
Post a Comment