நாசரேத்தில் ராகுல் காந்தி பிறந்த நாள் கொண்டாட்டம்.
நாசரேத், ஜூன் 19, நகர காங்கிரஸ் கமிட்டி சார்பில் இந்தியாவின் வருங்காலம் ராகுல் காந்தியின் 54 வது பிறந்தநாள் விழா கொண்டாட்டம் நடைபெற்றது. தூத்துக்குடி தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் ஊர்வசி அமிர்தராஜ் ஆலோசனைப்படி, நாசரேத் காமராஜர் பேருந்து நிலையம் முன்பாக அக்கட்சியினர் பட்டாசு வெடித்து, பொது மக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
இந்நிகழ்வில் நாசரேத் நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வகுமார், வார்டு கவுன்சிலர்கள் எட்வர்ட் கண்ணப்பா, செல்வின், வார்டு பொறுப்பாளர்கள் ஜெயக்குமார், பிரேம்குமார், ஏ.டி.ஹெச் சந்திரன், ஜோசப், பாஸ்கர், பிரகாஷ், விஜி, ராஜா சிங், நசரேயன், காமராஜ், விஜய் மற்றும் கமிட்டி உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி மாவட்டம் ஏரல் தாலுகா தென் மண்டல ஒருங்கிணைப்பாளர் Vnசரவணன் - தமிழக குரல் செய்திகள்.

No comments:
Post a Comment