திருச்செந்தூரில் கரை ஒதுங்கிய ஜெல்லி மீன்கள்.... மீன்வளத்துறையினர் ஆய்வு....
மன்னார் வளைகுடா பகுதியில் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் செஞ்சொறி என்ற ஜெல்லி மீன்கள் கடல் நீரின் திசை மாறுபாட்டிற்கு ஏற்ப காணப்படுகிறது. இது கொட்டும் தன்மையுடைய ஜெல்லி மீன்களாகும். இதனால் நீரில் இருக்கும் போதோ அல்லது கடற்கரை பகுதிகளில் கிடந்தாலோ அவற்றை கையினால் தொடுதல் கூடாது. அவற்றை அறியாமல் தொடுவதால் ஏற்படும் எரிச்சல் மற்றும் காந்தலை குறைக்க வினிகரை காயம் ஏற்பட்ட பகுதியில் சுமார் ஒரு நிமிடங்கள் தெளித்து பயன்படுத்தலாம். பின்னர் கலமைன் அல்லது கலட்ரைல் மருந்தினை உடனடியாக பயன்படுத்த 24 மணி நேரத்திற்குள் ஏற்பட்ட காயம் சரியாகிவிடும்.
இது தொடர்பாக மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த பட்டது. இதில் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் இணை ஆணையர் கார்த்திக், திருக்கோவில் ஏஎஸ்ஓ ராமச்சந்திரன், மீன்வளம் மற்றும் மீனவ நலத்துறை தூத்துக்குடி மாவட்ட உதவி இயக்குனர் புஷ்ரா ஷபனம், ஆய்வாளர் சுப்பிரமணியன், சிவராமகிருஷ்ணன் மற்றும் கடலோர காவல் உதவி ஆய்வாளர் கோமதிநாயகம் மற்றும் கடலோர காவலர்கள் திருக்கோவில் கடற்கரை பாதுகாப்பு பணியாளர்கள், கடற்கரை பாதுகாப்பு பணியின் ஒருங்கிணைப்பாளர் சிவராஜா உட்பட பலரும் ஆய்வில் ஈடுபட்டனர்.
தமிழக குரல் செய்திகளுக்காக
MT.அந்தோணி ராஜா
திருச்செந்தூர் தாலுகா செய்தியாளர்.
MT.அந்தோணி ராஜா
திருச்செந்தூர் தாலுகா செய்தியாளர்.

No comments:
Post a Comment