பண்ணைவிளையில் பயன்பாட்டு பொருட்கள் பனை ஓலை பயிற்சி.
தூத்துக்குடி மாவட்டம், ஜூன் 28, ஏரல் அருகே உள்ள பண்ணைவிளை தானியேல் தியான இல்லத்தில் வைத்து இலவச பனை ஓலை பயன்பாட்டு பொருட்களுக்கான பயிற்சி வேதாசலம் கிராம அரகட்டளை சார்பில் நடைபெற்றது.
இப்பயிற்சியை பண்ணைவிளை சேகர தலைவர் அருட்திரு. ஜான் வெஸ்லி தலைமையில் ஜெபம் செய்து துவக்கி வைத்தார். தென்னிந்திய திருச்சபை தூத்துக்குடி நாசரேத் திருமண்டலத்தின் சுற்று சூழல் கரிசனை துறை இயக்குனர் அருட்திரு. ஜான் சாமுவேல் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
ஜூன் 25, 26 மற்றும் 27 ஆகிய மூன்று நாட்களாக காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெற்ற இப்பயிற்சியில் பண்ணைவிளை, பண்டாரவிளை சுற்றுப்புற பெண்கள் கலந்து கொண்டனர். இதில் பனை ஓலை கொண்டு கூடை, பெட்டி, பவுச் மற்றும் அலங்கார மாலை போன்ற பொருட்களை "மல்லிகை பனை பொருள் அங்காடியை" சேர்ந்த டயானா பயிற்றுவித்தார். நிறைவு நாளான நேற்று ஜூன் .27 மாலை, பயிற்சியில் செய்து வைத்த பொருட்களை காட்சி படுத்தி வைத்து இருந்தனர்.
பயிற்சிக்கான மதிய உணவு சிற்றுண்டி போன்ற ஏற்பாடுகளை திருமண்டல பெருமன்ற பொறுப்பாளர்கள் செய்து இருந்தனர்.

No comments:
Post a Comment