தூத்துக்குடி தெற்கு மாவட்டம் ஆறுமுகநேரியில் தமிழ்நாடு இந்து வியாபாரிகள் சங்கம் ஆண்டு விழா மற்றும் மாநாடு நடைபெற்றது. விழாவிற்கு தமிழ்நாடு இந்து வியாபாரி சங்க மாநிலத் தலைவர் ஈஸ்வரன் தலைமை தாங்கினார். மூத்த நிர்வாக இயக்குனர் சீனிவாசன் முன்னிலை வைத்தார் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ செண்டலங்கார செண்பக மன்னார் இராமானுஜ ஜீயர் சுவாமிகள் ஆசியுரை வழங்கினர்
சிறப்பு விருந்தினராக பாரதிய ஜனதா கட்சி தேசிய செயலாளர் எச். ராஜா கலந்து கொண்டு மாநாட்டு கொடியை ஏற்றி வைத்து சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சியில் மாநிலச் செயலாளர் காசி வேலு, தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாஜக தலைவர் சித்ராங்கதன், மாவட்ட பொதுச் செயலாளர் சிவமுருக ஆதித்தன் உட்பட கட்சி நிர்வாகிகள் மற்றும் பொறுப்பாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இதற்கான ஏற்பாடுகளை ஆறுமுகநேரி கிளைச் சங்க தலைவர் சிவகுமார், செயலாளர் சண்முகம், பொருளாளர் முருகேச பாண்டியன் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர். விழாவில் மாணவிகளின் பரதநாட்டிய நிகழ்ச்சியும் சிறப்பாக நடைபெற்றது.
தமிழக குரல் செய்திகளுக்காக
MT.அந்தோணி ராஜா
திருச்செந்தூர் தாலுகா செய்தியாளர்.

No comments:
Post a Comment