உடன்குடி வைத்தியலிங்கபுரத்தில்... ஸ்ரீ உச்சினிமாகாளி அம்பாள் கோவில் கொடைவிழா....
உடன்குடி வைத்தியலிங்கபுரத்தில் ஸ்ரீ உச்சினி மாகாளி அம்பாள், ஸ்ரீ பட்டரை அம்பாள் கோவில் உள்ளது. இந்த கோயில் கொடை விழா நேற்று திங்கட்கிழமை தொடங்கியது. காலை 5 மணிக்கு சிறப்பு திருவிளக்கு பூஜை, இரவு அம்பாளுக்கு மாக்காப்பு அலங்காரத்துடன் தீபாரதனை நடைபெற்றது. நள்ளிரவு 11 மணிக்கு அம்பாள் திருக்கும்பத்தில் வீதி உலா பவனி நடைபெற்றது. தொடர்ந்து இன்று செவ்வாய்க்கிழமை காலை 8 மணிக்கு பால்குடம் எடுத்து வருதல், காலை 9 மணிக்கு அம்பாளுக்கு அபிஷேகம், மதியம் 12 மணிக்கு அம்பாளுக்கு வெள்ளி அங்கி அலங்காரத்துடன் மகா தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து மதியம் 1 மணிக்கு அம்பாள் திருக்கும்பத்தில் ஊர் பவனி வருதல், மாலை 4 மணிக்கு பெண் மக்கள் காணிக்கை செலுத்துதல், 5 மணிக்கு அம்பாளுக்கு நியமனங்கள் செலுத்துதல் நடைபெற்றது. நள்ளிரவு 12 மணிக்கு அம்பாளுக்கு சந்தன காப்பு அலங்காரத்துடன் மகா தீபாரதனை, 1 மணிக்கு ஸ்ரீ உச்சினி மாகாளி அம்பாள் ராஜமேள வாத்தியங்களுடன் அலங்கார தேர் சப்பரத்தில் ஊர் பவனி வருதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. புதன்கிழமை காலை 10 மணிக்கு பொங்கல் விடுதல், மதியம் 12 மணிக்கு அம்பாள் திரு கும்பத்தில் கோட்டை சுற்றி வந்து மஞ்சள் நீராடுதல் நடைபெறுகிறது. விழாவையொட்டி பக்தர்களுக்கு நேற்று இரவு, இன்று காலை ,மதியம் ,இரவு அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக கமிட்டினர் செய்திருந்தனர்.
தமிழக குரல் செய்திகளுக்காக
MT.அந்தோணி ராஜா
திருச்செந்தூர் தாலுகா செய்தியாளர்.

No comments:
Post a Comment