நாசரேத் சாலமோன் பள்ளியில் மாணவர்களின் பதவி ஏற்பு விழா. - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Saturday, 29 June 2024

நாசரேத் சாலமோன் பள்ளியில் மாணவர்களின் பதவி ஏற்பு விழா.


 நாசரேத் சாலமோன் பள்ளியில் மாணவர்களின் பதவி ஏற்பு விழா.



நாசரேத்,ஜீன்: 29, நாசரேத் சாலமோன் மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கான பதவி ஏற்பு விழா நடைபெற்றது.


இந்த பதவி ஏற்பு விழாவிற்கு சிறப்பு விருந்தினராக காவல் நிலைய உதவி ஆய்வாளர் வைகுண்டதாஸ் கலந்து கொண்டார். தலைமை காவலர் வேல் பாண்டி முன்னிலை வகித்தார். பள்ளி தாளாளர் ஜமீன் சாலமோன் வரவேற்று பேசி, பொன்னாடை அணிவித்தார்.


பள்ளி தலைவர் எலிசபெத் விழாவினை தொகுத்து வழங்கினார். பள்ளி நிர்வாகி பியூலா சாலமோன் மாணவர்களுக்கான பதவி பேட்ஜை அணிவித்தார். பள்ளி முதல்வர் ஜான்சி கனகராஜ் கொடி அசைத்து அணிவகுப்பை தொடங்கி வைத்தார்.


விழாவில் பள்ளி மாணவாகளின் தலைவர், பள்ளி மாணவர்களின் உதவி தலைவர், தலைமை மாணவன், தலைமை மாணவி, கல்வி அமைச்சர், உதவி கல்வி அமைச்சர், விளையாட்டு துறை அமைச்சர், உதவி விளையாட்டு துறை அமைச்சர், ஒழுங்குமுறை அமைச்சர், உதவி ஒழுங்குமுறை அமைச்சர், கலாச்சார அமைச்சர், உதவி கலாச்சார அமைச்சர், சுற்றுச்சூழல் அமைச்சர், உதவி சுற்றுசூழல் அமைச்சர், சிவப்பு அணி தலைவர், சிவப்பு அணி உதவி தலைவர், ஊதா அணி தலைவர், ஊதா அணி உதவி தலைவர், பச்சை அணி தலைவர், பச்சை அணி உதவி தலைவர், மஞ்சள் அணி தலைவர், மஞ்சள் அணி உதவி தலைவர் ஆகிய மாணவர்களுக்கான பதவி ஏற்பு விழா நடைபெற்றது.


இறுதியில் உதவி ஆய்வாளர் வைகுண்ட தாஸ், தலைமை காவலர் வேல்பாண்டி மற்றும் மாணவர்கள் சுற்றுசூழல் பாதுகாப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக மரகன்றுகளை நட்டு வைத்து விழாவை சிறப்பித்தனர். முடிவில் உதவி முதல்வர் மாரிதங்கம் நன்றி உரை கூறினார்.


தூத்துக்குடி மாவட்டம் ஏரல் தாலுகா
தென் மண்டல ஒருங்கிணைப்பாளர்
Vn சரவணன் தமிழக குரல் செய்திகள்.

No comments:

Post a Comment

Post Top Ad