காவேரி மருத்துவமனையின் இலவச சிறப்பு பொது மருத்துவ முகாம். - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Sunday, 30 June 2024

காவேரி மருத்துவமனையின் இலவச சிறப்பு பொது மருத்துவ முகாம்.


காவேரி மருத்துவமனையின் இலவச சிறப்பு பொது மருத்துவ முகாம்.


நாசரேத், ஜூன்.30, திருநெல்வேலி காவேரி மருத்துவமனையின் இலவச சிறப்பு பொது மருத்துவ முகாம், நாசரேத் கஸ்பா பாடசாலையில் ஜூன்.30 அன்று காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெற்றது.


இந்த முகாமில் நுரையீரல் செயல்பாடு சோதனை, நரம்பியல் சோதனை, சர்க்கரை பரிசோதனை, ECG, ECHO உட்பட பல பரிசோதனைகள்  நடைபெற்றது. இந்த முகாமில் நாசரேத் சுற்று வட்டாரத்தை சேர்ந்த சுமார் 100 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயன்பெற்றனர். அவர்களுக்கு பரிசோதனையின் போது மருத்துவர்கள் ஆலோசனை படி இலவசமாக மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டன.


இந்த முகாமில் டாக்டர்.அன்னி பிரவீனா, டாக்டர். பெலிண்டா ஆனட், டாக்டர். முகிலன் ஆகிய மருத்துவ குழுவினர்களுடன் செவிலியர்கள் பலர் கலந்து கொண்டனர்.


தூத்துக்குடி மாவட்டம் ஏரல தாலுகா தென் மண்டல ஒருங்கிணைப்பாளர் Vn.சரவணன் தமிழக குரல் செய்திகள்.

No comments:

Post a Comment

Post Top Ad