மணியாச்சி ரயில்நிலையத்தில் வாஞ்சிநாதன் நினைவு தினத்தை முன்னிட்டு அறவோர் முன்னேற்றக் கழகம் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்!
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே உள்ள வாஞ்சி மணியாச்சி ரயில் நிலையத்தில் சுதந்திரப் போராட்ட வீரர் வாஞ்சிநாதனின் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
செங்கோட்டையை சேர்ந்த ரகுபதி ஐயர்-ருக்குமணி தம்பதியினருக்கு 1886ல் மகனாக பிறந்தவர் சுதந்திர போராட்ட வீரர் வாஞ்சிநாதன். 1911ஆம் ஆண்டு ஜூன் 17ல் அப்போதைய ஆங்கிலேய அரசின் கலெக்டர் ஆஸ்துரையை தனது துப்பாக்கியால் சுட்டுக்கொன்றார். பின்பு அங்கிருந்த கழிப்பறையில் தனக்குத் தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதன் நினைவாக மணியாச்சி ரயில் நிலையத்தை வாஞ்சி மணியாச்சியாக மத்திய அரசு அறிவித்தது 2014 ஆண்டு அறிவித்தது.
வாஞ்சி மணியாச்சி ரயில் நிலையத்தில் நடந்த வாஞ்சிநாதன் நினைவு நாளில் அறவோர் முன்னேற்றக் கழக மாநில துணைத்தலைவர் முத்துசிவம், மாநில செயலாளர் திருநெல்வேலி சுரேஷ் சிவம், பூசாரி பேரவை மாநில தலைவர் சாஸ்தா, இந்து முன்னணி மாவட்டச் செயலாளர் ராகவேந்திரா, விஜயராகவன் ஆகியோர் வாஞ்சிநாதன் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
வாஞ்சிநாதன் மணிமண்டபத்தில் வெண்கலத்தில் ஆன திருவுருவ சிலை அமைக்க மத்திய , மாநில அரசுக்கு அறவோர் முன்னேற்றக் கழகம் மற்றும் இந்து முன்னணி சார்பாக கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது இதை உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படி கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழக குரல் செய்திகளுக்காக- தூத்துக்குடி மாவட்ட நிருபர் சுந்தரராமன்

No comments:
Post a Comment