காயல்பட்டினத்தில் பக்ரீத் பண்டிகை சிறப்பு தொழுகை ஏராளமான இஸ்லாமியர்கள் பங்கேற்பு - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Tuesday, 18 June 2024

காயல்பட்டினத்தில் பக்ரீத் பண்டிகை சிறப்பு தொழுகை ஏராளமான இஸ்லாமியர்கள் பங்கேற்பு


 காயல்பட்டினத்தில் பக்ரீத் பண்டிகை சிறப்பு தொழுகை ஏராளமான இஸ்லாமியர்கள் பங்கேற்பு


இஸ்லாமியர்களால் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகையான பக்ரீத் பண்டிகை இன்று கொண்டாடப்பட்டது. இந்த பண்டிகை ஹஜ் பெருநாள் எனவும், தியாக திருநாள் எனவும் அழைக்கப்படுகிறது. இறைவனின் தூதர்களில் முக்கியமானவர்களில் ஒருவராக கருதப்படுபவர் இப்ராஹிம் நபிகளார். இறைவனின் கட்டளையை ஏற்று தனது ஒரே மகனான இஸ்மாயிலை பலியிட துணிந்த இறைத்தூதர் இப்ராஹிமின் தியாகத்தை உலகுக்கு உணர்த்தும் விதமாக பக்ரீத் பண்டிகை இஸ்லாமியர்களால் கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகையன்று ஏழை, எளிய மக்களுக்கு குர்பானி கொடுப்பது வழக்கம்.

தமிழகம் முழுவதும் பக்ரீத் பண்டிகை பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் தாயும்பள்ளி ஜமாஅத் பள்ளி வாசலில்  பக்ரீத் சிறப்பு தொழுகை இன்று நடந்தது. இதனை  இமாம் அல்ஹாபிழ் ஈஸா சபீக் நடத்தினார். இதில் பொருளாளர் ஹாஜி தவ்லத், செயலாளர் பாரூக், சமூகநீதிப் பேரவை செயலாளர் வழக்கறிஞர் அஹமது சாஹிபு, நியாஸ், சம்சுதீன், எல்டிஎஸ்  சித்தீக், எஸ்டிபிஐ  மெய்தீன், காயல்பட்டினம் நகராட்சி முன்னாள் துணைத் தலைவர் மும்பை மெய்தீன், சுப்ரீம் பிலால், ஏஆர் தாஹா உள்பட நூற்றுக்கணக்கான ஜமாஅத்தார்கள், இளைஞர்கள், சர்வகட்சி பிரமுகர்கள் கலந்து கொண்டனர். தொழுகையின் இறுதியில், நாட்டில் அமைதி நிலவவும், மத சகிப்புத் தன்மையுப், சகோதரத்துவமும் தலைத்தோங்கவும் சிறப்புப் பிராத்தனை மேற்கொள்ளப்பட்டது.


தமிழக  குரல் செய்திகளுக்காக

MT.அந்தோணி ராஜா

திருச்செந்தூர் தாலுகா செய்தியாளர்.

No comments:

Post a Comment

Post Top Ad