தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் காயல்பட்டினம் கடற்கரையில் பக்ரீத் சிறப்பு தொழுகை எம்ஜி ஷரீஃப் நடத்தி வைத்து உரையாற்றினார்
இஸ்லாமியர்களால் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகையான பக்ரீத் பண்டிகை இன்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகை நடந்தது. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் கிளையின் சார்பாக ஈதுல் அல்ஹா என்ற ஹஜ் பெருநாள் திடல் தொழுகை காயல்பட்டினம் கடற்கரையில் இன்று காலை நடைபெற்றது.
தியாகத்தின் அடிப்படையை கொண்ட இத்திருநாளின் திடல் தொழுகையை மற்றும் உரையை காயல்பட்டினம் ஜாமிஉத் தவ்ஹீத் ஜும்ஆ பள்ளியின் துணை கத்தீப் இமாம் எம்ஜி ஷரீஃப் நடத்தி வைத்து நடத்தினார். தியாகத்தையும் உறுதிப்பாட்டையும் நினைவில் கொள்வோம், இப்ராஹிம் நபியின் வாழ்க்கை மனித சமுதாயத்திற்கு படிப்பினை என அவர் எடுத்துரைத்தார்.
கடற்கரையில் நடைபெற்ற திடல் தொழுகையில் ஆண்கள் மற்றும் பெண்கள் குழந்தைகள் உட்பட திரளான மக்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை கிளை நிர்வாகிகள், உறுப்பினர்கள் செய்திருந்தனர்.
தமிழக குரல் செய்திகளுக்காக
MT.அந்தோணி ராஜா
திருச்செந்தூர் தாலுகா செய்தியாளர்.

No comments:
Post a Comment