திருச்செந்தூர் முருகன் கோவில் கும்பாபிஷேக பணிகளை முன்னிட்டு 9 கோபுர கலசம் கீழே இறக்கப்பட்டது! - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday, 17 June 2024

திருச்செந்தூர் முருகன் கோவில் கும்பாபிஷேக பணிகளை முன்னிட்டு 9 கோபுர கலசம் கீழே இறக்கப்பட்டது!

 


திருச்செந்தூர்  முருகன் கோவில் கும்பாபிஷேக பணிகளை முன்னிட்டு 9 கோபுர கலசம் கீழே இறக்கப்பட்டது!


தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் 15 ஆண்டுகளுக்குப் பிறகு  கும்பாபிஷேக பணிகளை முன்னிட்டு ராஜகோபுரத்தில் இருந்து 9 கலசங்கள் புதுப்பிக்கும் பணிக்காக கீழே இறக்கப்பட்டு  திருப்பணிகள் தொடங்கியுள்ளன.


உலக புகழ்பெற்ற முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில்  பக்தர்களின் வசதிக்காக ரூபாய் 300 கோடி மதிப்பீட்டில் பெருந்திட்ட பணிகள் தொடங்கி கடந்த 1  வருடங்களாக நடைபெற்று வருகின்றன. மேலும் கும்பாபிஷேகம் நடத்தவும் முடிவு செய்யப்பட்டு 2023 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் ராஜ கோபுர திருப்பணிக்கான பாலாலயம் நடைபெற்றது. 

 2025 ஆம் ஆண்டுக்குள் கும்பாபிஷேகம் நடத்தப்படும் என அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்திருந்தார். அதற்கான பணிகள் தற்போது மிக வேகமாக நடைபெற்று வருகிறது. 

அதன் ஒரு பகுதியாக 9 நிலைகள் 137 அடி உயரம் உள்ள ராஜ கோபுரத்தில் ஒன்பது கோபுர கலசங்களை புதுப்பிப்பதற்காகவும், கோபுரக் கலசங்களில் உள்ள பழைய நவதானியங்கள் மாற்றப்படுவதற்காகவும் ஆகம விதிப்படி பூஜைகள் செய்யப்பட்டு 15 ஆண்டுகளுக்கு பிறகு கோபுரத்திலிருந்து கலசம் கழற்றி கீழே கொண்டு வரப்பட்டது. 

அப்போது கோபுர கலசத்துக்குள் இருந்த வரகு அரிசி அதன் தன்மை மாறாமல் அப்படியே இருந்ததைக் கண்டு அறநிலையத்துறை அதிகாரிகள் பக்தர்கள் அனைவரும் பரவசமும் ஆச்சரியமும் அடைந்தனர்.


 இதற்கு முன்பாக கடந்த 2009 ஆம் ஆண்டு ஜூலை 2ஆம் தேதி 15 ஆண்டுகளுக்கு முன்பு திருச்செந்தூர் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.


தமிழக குரல் செய்திகளுக்காக-சுந்தரராமன்

No comments:

Post a Comment

Post Top Ad